சென்னையில் தங்கம் விலை இன்றும் 2-து நாளாகக் குறைந்துள்ளது இல்லத்தரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 2 நாட்களில் மொத்தம் 1,064 ரூபாய் குறைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில் தற்போது சிறிது மாற்றம் காணப்படுவது சிறு ஆறுதலாக உள்ளது.
உக்ரைன்-ரஷ்யப் போர் தொடங்கியது முதலே தங்கம் விலையில் அதிரடி மாற்றம் நிலவி வருகிறது. போர் 100 நாட்களைக் கடந்துவிட்டநிலையில், போர் பதற்றம் காரணமாக, பெரும்பாலும் விலை அதிகரித்து வந்தது.
இறக்கம் காட்டிய தங்கம்
இந்நிலையில் எதிர்பார்ப்புக்கு மாறாக, இன்று ஒரு சவரன் தங்கம், அதிரடியாக மேலும் ரூ.544 குறைந்து ரூ.37,376-க்கு விற்கப்படுகிறது. இன்று கிராமுக்கு ரூ.68 குறைந்து ரூ.4672-க்கு விற்கப்படுகிறது.
நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,747க்கும், ஒரு சவரன் தங்கம் ரூ.37,920க்கும் விற்பனை செய்யப்பட்டது.மொத்தமாக 2 நாட்களில், சவரனுக்கு ரூ.1064 குறைந்துள்ளது.
வரி உயர்வு
கடந்த 1-ந் தேதி தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு 15 சதவீதம் உயர்த்தியது. அதன்பிறகு தங்கம் விலை தொடர்ந்து உயரத் தொடங்கியது. கடந்த 30-ந்தேதி பவுன் ரூ.37,424-க்கு விற்கப்பட்ட தங்கம் 1-ந்தேதி அதிரடியாக ரூ.38 ஆயிரத்தை தாண்டியது.
திருமண சீசனில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, தங்க நகை வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.அதேநேரத்தில் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவோருக்கும், இப்போது முதலீடு செய்யக்கூடிய நேரம் என்பதால், தாராளமாக வாங்க முன்வரலாம்.
மேலும் படிக்க...
Share your comments