சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை, ஒரே நாளில் 600 ரூபாய் அதிகரித்துள்ளது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இது தீபாவளிப் பண்டிகைக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கும், திருமணம் வைத்திருப்பவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு, ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை, தற்போது மீண்டும் ரூ.38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ஆட்டம் காட்டும் தங்கம்
தங்கம் விலையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகவே ஏற்ற இறக்கம் காணப்பட்டு வருகிறது. குறிப்பாக இந்த மாதம் தொடக்கத்தில் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்தது.
கடந்த வாரத்தில் அதாவது, கடந்த 13-ந்தேதி ஒரு சவரன் ரூ.38,080-க்கு விற்கப்பட்டது. மறுநாள் சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.37,880-க்கு விற்கப்பட்டது.
ஏற்ற இறக்கம்
இந்நிலையில் நேற்று பவுனுக்கு ரூ.20 குறைந்து ரூ.37,320க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேநேரத்தில் தங்கம் விலை இன்று அதிரடியாக கிராமுக்கு ரூ.75 உயர்ந்து உயர்ந்து மீண்டும் ரூ.38 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
ரூ.38,000
தங்கம் இன்று சவரனுக்கு ரூ.600 அதிகரித்து ரூ.39,920-க்கு விற்கப்படுகிறது. கடந்த13ம் தேதி 10 ம் தேதி ரூ.38,080 ரூபாய்க்கு ஒரு சரவன் தங்கம் விற்கப்பட்டது.
திடீர் ஏமாற்றம்
தீபாவளியை ஒட்டிய இந்த விலை உயர்வு, தீபாவளிப் பண்டிகைக்கு நகை வாங்கத் திட்டமிட்டிருந்தவர்களுக்கும், திருமணம் வைத்திருப்பவர்களுக்கும் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது. புரட்டாசியைத் தொடர்ந்து வரும் ஐப்பசி மாதம் திருமண சீசன் களைகட்டும் மாதம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
வேளாண் கருவிகள் வாங்க 50%மானியம்!
மானியத்தில் தரிசு நிலத்தை விளைநிலமாக மாற்ற விவசாயிகளுக்கு அழைப்பு!
Share your comments