கடந்த சில நாட்களாக குறைந்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.39 ஆயிரத்தைத் நெருங்கியிருப்பது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
27-ந்தேதி
தங்கம் விலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஏற்றத்தாழ்வு நிலவி வந்தது. கடந்த 27-ந்தேதி சவரன் ரூ.37 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன்பின் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிகரித்தது.
ரூ.480 உயர்வு
இதற்கிடையே நேற்று பவுன் ரூ.38 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை உயர்ந்தது.சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.38 ஆயிரத்து 680-க்கு விற்றது. ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 835 ஆக உள்ளது. வெள்ளி கிலோவுக்கு ரூ.300 அதிகரித்து ரூ.67 ஆயிரமாக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.67-க்கு விற்கிறது.
ரூ.1040
2 நாட்களில் தங்கம் சவரனுக்கு 1040 ரூபாய் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தங்கம் விலை தொடர்ந்து 3-வது நாளாக உயர்வை சந்தித்துள்ளது இல்லத்தரசிகளை மட்டுமல்லாமல், இனிவரும் திருமண சீசனில் கல்யாணம் செய்யத் திட்டமிட்டிருப்பவர்களையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
மேலும் படிக்க...
Share your comments