தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.496 அதிகரித்துள்ளது.தங்கம் விலை இன்று கிராமுக்கு 5 ரூபாயும், சவரனுக்கு 40 ரூபாயும் அதிகரித்துள்ளது
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை மாலை நிலவரப்படி, கிராம் ரூ.4,815 ஆகவும், சவரன், ரூ.38,520 ஆகவும் இருந்தது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(வியாழக்கிழமை) கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ரூ.4,820 ஆகவும், சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து, ரூ.38 ஆயிரத்து 560 ஆகவும் ஏற்றம் கண்டது.
கோவை, திருச்சி, வேலூரில் தங்கம் கிராம் ரூ.4,7820க்கு விற்கப்படுகிறது.
தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது. கடந்த இரு நாட்களில் மட்டும் சவரனுக்கு ஏறக்குறைய 500 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது நடுத்தரக் குடும்பத்தினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் நடந்த தேர்தலில் குடியரசுக் கட்சியினர் வெற்றி பெற்றிருப்பது, அமெரிக்க பணவீக்க புள்ளிவிவரங்கள் இன்று வெளியாவது போன்ற காரணங்களால் பங்குச்சந்தையிலும் பெரிய சரிவு இன்று காணப்படுகிறது.
இதன் தாக்கம் தங்கத்திலும் இருக்கலாம். அவ்வாறு இருந்தால் தங்கத்தின் விலையி்ல் அடுத்துவரும்
நாட்களில் மாற்றம் இருக்கக்கூடும் என சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள், வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராம் ரூ.66.70 ஆக இருந்தநிலையில் 40 காசு சரிந்து, ரூ.67.00ஆகவும், கிலோவுக்கு ரூ.400 சரிந்து, ரூ.67,000 ஆகக் குறைந்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments