1. செய்திகள்

தீபாவளி நேரத்தில் தங்கம் விலை சரிவு, மிஸ் பண்ணாதீங்க !!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Gold Price Drop

உலகச் சந்தைகளில், அமெரிக்க டாலர் 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததைத் தொடர்ந்து தங்கத்தின் விலையும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது.

எரிசக்தி நெருக்கடி ஐரோப்பிய பொருளாதாரத்தை மந்தநிலைக்குள் தள்ளக்கூடும் என்கிற காரணத்தினால், யூரோ டாலருக்கு இணையாக மதிப்பு இருந்தது. டாலரின் வலிமை மற்ற நாணயங்களை வாங்குபவர்களுக்கு கிரீன்பேக்-விலை தங்கத்தின் விலையை உயர்த்துகிறது.

இந்தியாவில் தங்கம் வெள்ளி விலை

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் இன்று தங்கம் விலை சீராக உள்ளது. 22 காரட் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ. 46,500 ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து ரூ.200 குறைந்துள்ளது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 50,730 ஆக உள்ளது. நேற்றைய விலையில் இருந்து ரூ.220 குறைந்துள்ளது.

வெள்ளி விலையைப் பொறுத்தவரை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய மூன்று நகரங்களிலும் இன்று விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ. 56,150 ஆக விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய விலையில் இருந்து கிலோவிற்கு ரூ.250 குறைந்துள்ளது.

சென்னையில் தங்கம் விலை:

தமிழகத்தில் இம்மாத தொடக்கம் முதல், தங்கம் விலையில் ஏற்றம், இறக்கமாக இருந்து வருகிறது. அதன்படி, இன்று சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.15 குறைந்து, ரூ. 4,685 ஆகவும், சவரனுக்கு ரூ.120 குறைந்து, ரூ.37,480க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5,111 என சவரனுக்கு ரூ. 40,888 ஆக விற்பனையாகிறது.

வெள்ளி விலை:

சென்னையில் இன்று வெள்ளியின் விலையில் கிராமுக்கு ரூ.0.50 குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி கிராமுக்கு ரூ.61க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோவுக்கு ரூ.61,000க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நேற்றைய விலையை விட இன்று கிலோவிற்கு ரூ.500 குறைந்துள்ளது.

மேலும் படிக்க:

சிவகாசி பெயர் காரணம் மற்றும் சிவன் கோவிலின் சிறப்புகளும்

இது அல்லவா தீபாவளி, தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

English Summary: Gold prices drop during Diwali, don't miss it!! Published on: 20 October 2022, 08:53 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.