ராக்கெட் வேகத்தில் அதிகரித்துவந்த தங்கம் நிலை அதிரடியாகக் குறைந்திருப்பது தங்கம் வாங்குவோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனிப்பட்ட கவுரவம்
தங்க நகை அணிவதை ஆடம்பரமாகவும், கவுரவமாகவும் கருதுவதால், அதன் விலை எவ்வளவு ஏறினாலும் மவுசு மட்டும் குறைவது இல்லை. சர்வதேச பங்குச்சந்தை நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்படுகிறது.
தொடரும் அதிகரிப்பு
குறிப்பாக ரஷியா- உக்ரைன் இடையே போர் காரணமாக, பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனம் முழுவதும் தங்கத்தின் பக்கமே இருக்கிறது. இதன் காரணமான முன் எப்போதும் இல்லாத வகையில், தங்கத்தின் விலையில் மாற்றம் நிலவி வருகிறது.
அதிரடி சரிவு
கடந்த வாரம் ஒரு கிராம் தங்கம் 5 ஆயிரத்து290 ரூபாய்க இருந்த நிலையில், தற்போது திடீர் சரிவு காணப்படுகிறது. கடந்த 19ம் தேதி 5 ஆயிரத்து 290 ரூபாயாக இருந்த ஒரு கிராம் தங்கத்தின் விலை இன்று, 5 ஆயிரத்து 201ரூபாய்க்கு இறங்கியுள்ளது.
ரூ.41,608
ஒரு சவரன் தங்கம் 41 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சி, தங்கத்தில் முதலீடு செய்வோருக்கு நல்வாய்ப்பாகக் கருதப்படுகிறது. எனவே முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யலாம்.
அதேநேரத்தில் தங்கத்தின் இந்த விலைசரிவு, இல்லத்தரசிகளையும் மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது. எத்தனைதான் கவரிங் நகைகளை அணிந்தாலும், தங்கத்தை அணியும்போது மனதில் உருவாகும் மகிழ்ச்சியும், செருக்கும் தனிதான்.
மேலும் படிக்க…
Share your comments