தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று மீண்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 வரை குறைந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் நிம்மதியை அளித்துள்ளது.
தங்கத்தின் மீதான மோகம் இன்றளவும் அதிகமாகவே உள்ளது. ஆனால் கடந்த சில நாட்களாக யாரும் எதிர்பாராத வகையில் தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. இதனால் பொதுமக்கள்/ நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். கடந்த இரு நாட்களாக தங்கத்தின் விலையில் கணிசமான இறக்கம் தென்பட்ட நிலையில் இன்று மேலும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்துள்ளது. ஏறுன வேகத்துக்கு தொடர்ச்சியாக இறக்கத்தை சந்திப்பதால் தற்போது பொதுமக்கள் கொஞ்சம் நிம்மதியடைந்துள்ளனர்.
தென்னிந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை வைத்துள்ள மாநிலத்தில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் சென்னை தங்கத்தின் வர்த்தகத்தை தீர்மானிக்கும் முக்கிய மாநகரமாக திகழ்கிறது. அந்த வகையில் இன்றைய தங்கத்தின் விலையானது சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.25 குறைந்து 5,510 ரூபாய் ஆகவும், சவரன் ஒன்றுக்கு ரூ.200 வரை குறைந்து ரூ.44,080 ஆகவும் விற்பனையாகிறது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1771 டாலர் வரையில் சரிந்துள்ளது. மேலும் நடுத்தர மக்களிடம் பொருளாதார வகையில் முன்னுரிமை அளிக்கப்படுவது தங்கத்திற்கு தான். தொடர்ந்து தங்கத்தில் முதலீடு செய்வதை பழக்கமாக கொண்டுள்ள மக்களிடத்தில் நகை விலை ஏற்றம், இறக்கம் ஒரு வித தடுமாற்றத்தை உண்டாக்குகிறது என்பது வாடிக்கையாகிவிட்டது.
அமெரிக்க டாலரின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் போன்ற பணவீக்கம், பணவாட்டம் மற்றும் பணமதிப்பிழப்பு போக்குகளைப் பொறுத்து வெள்ளி விலையில் மாற்றம் காணப்படும். அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, வெள்ளியின் விலை அதிகரிக்கிறது.
தங்கத்தின் விலை சரிவை தொடங்கியுள்ள நிலையில், வெள்ளியின் விலையும் கணிசமாக சரிவினை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் குறைந்து ரூ.75.70 எனவும், கிலோ ஒன்றிற்கு 300 ரூபாய் வரை விலை குறைந்து ரூ.75,700 எனவும் விற்பனையாகிறது.
தமிழக அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் பெற யாரெல்லாம் தகுதி?
Share your comments