1. செய்திகள்

கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி: விரைவில் UPI வசதி!

R. Balakrishnan
R. Balakrishnan
UPI Facility in Co-operative society

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டுறவு வங்கிகளிலும் விரைவில் யுபிஐ சேவை (UPI service) அறிமுகப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுபிஐ சேவை (UPI service)

யுபிஐ சேவை (UPI service) தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த “ஓராண்டாக எடுத்த தொடர் முயற்சிகளின் விளைவாக, தமிழ்நாட்டில் உள்ள தலைமை கூட்டுறவு வங்கி, அதன் 54 கிளைகள் மற்றும் அனைத்து 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், அதன் 922 கிளைகள் என அனைத்திலும் IMPS (Instant Money Payment System) கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் அனைத்து தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இன்னும் இரண்டு வாரங்களில் இவை அனைத்திலும் UPI (Unified Payment Interface) வசதியும் கொண்டு வரப்படும். இதன்மூலம் Google Pay, PayTM, BHIM உள்ளிட்ட அனைத்து பணமற்ற பரிவர்த்தனை வசதிகளும் அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

டிஜிட்டல் ரேஷன் அட்டை குறித்து மத்திய அரசின் முக்கிய தகவல்!

தமிழக அரசுப் பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?

English Summary: Good news for Co-operative Bank customers: UPI facility coming soon! Published on: 26 March 2023, 12:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.