1. செய்திகள்

அனைத்து நீர் பாசன முறைக்கும் முழு மானியம்: வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் தகவல்

Anitha Jegadeesan
Anitha Jegadeesan
Sprinkle irrigation

சிக்கன நீர்பாசனத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் 75 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை மானியங்களை வழங்கி வருகிறது. இன்று பெரும்பாலான தோட்டக்கலை பயிர்கள் சொட்டுநீர் பாசன முறையில் வளர்க்கப் பட்டு வருகின்றன. குறிப்பிடத்தக்க அளவில் விளைச்சலும் இருப்பதால் விவசாயிகள் அனைவரும் இதனை விரும்பி அமைத்துக் கொள்கிறார்கள்.

ஈரோடு மாவட்டத்தை சேர்த்த சிறு குறு மற்றும் பெரு விவசாயிகள் தங்களின் விளை நிலங்களில் சொட்டு நீர், தெளிப்பு நீர், மழை தூவான் போன்ற நீர் பாசன முறையை அமைப்பதற்கு அரசு 100 சதவீத மானியத்தை வழங்க உள்ளது. எனவே விவசாயிகள் மேலே குறிப்பிட்ட பாசன முறையில் ஏதேனும் ஒன்றை அமைத்து பயன் பெறுமாறு வட்டார வேளாண் தொழில் நுட்ப மேலாளர் கிருத்திகா தெரிவித்துள்ளார்.

சிறு குறு விவசாயிகளுக்கு, 100 சதவீத மானியமும், பெரு விவசாயிகளுக்கு, 75 சதவீத மனியமும் அமைத்து கொடுக்கப் பட உள்ளது. எனவே பயன் பெற விரும்பும் விவசாயிகள் தேவையான ஆவணங்களுடன் வேளாண்மை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், அல்லது கீழே குறிப்பிட்டுள்ள அலுவலர்களை அணுகலாம்.

வேளாண்  அலுவலர் - 99449 20101

உதவி வேளாண் அலுவலர்கள் - 99347 16743, 97880 90891, 99654 44123

Subsidy for all the type of irrigation

மானியம் பெற தேவையான ஆவணங்கள்

  • விவசாயிகள் தங்களது  நில ஆவணங்களுடன், கம்ப்யூட்டர் சிட்டா, அடங்கல், நில வரைபடம், ரேசன் கார்டு நகல்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் தோட்டக்கலை துறையை அணுக வேண்டும்.
  • விவசாயிகள் நீர் பாசனம் அமைக்க தாசில்தாரிடம் வாங்கிய சான்றிதழை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
  • எந்த வகையான நீர் பாசனத்தை தேர்வு செய்கிறார்கள், அதை  அமைப்தற்கான நில ஆய்வு சான்றிதழ் போன்றவற்றை  இணைக்க  வேண்டும்.
  • பிறகு மதிப்பீட்டை கணக்கிட்டு அதில் விவசாயின் மானியம் போக எஞ்சிய மதிப்பீட்டு தொகைக்கு தேர்ந்தெடுத்த நிறுவனத்திற்கு வங்கி வரைவோலை எடுக்க வேண்டும்.
  • விவசாயின் விண்ணப்ப படிவம் மாவட்ட நுண்நீர் பாசன தொழில்நுட்ப குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு, ஆய்வு செய்து ஒப்புதல் வழங்கப் படும்.
  • அதற்கு பின் விவசாயின் நிலத்தில்  நீர் பாசனம் அமைக்க பணி ஆணை வழங்கப்படும்.
English Summary: Good News For Erode Farmers: Agriculture Department announced subsidy for all type of irrigation Published on: 28 November 2019, 01:09 IST

Like this article?

Hey! I am Anitha Jegadeesan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.