சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 280 குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ. 38,720க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று ரூ.280 குறைந்து 38,440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 35 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 4,805 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல் வெள்ளியின் விலையும் சற்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 20 காசுகள் குறைந்து ரூ.64.80க்கும், கிலோவுக்கு 1,200 ரூபாய் குறைந்து 64,800 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.
மேலும் படிக்க
மகிழ்ச்சி செய்தி: ரேஷன் கடையில் தீபாவளி பரிசு, என்ன தெரியுமா?
Share your comments