மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுரை மாவட்டத்தில், உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு நாளை (24ம் தேதி) முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை உதவிகள் மற்றும் உபகரணங்கள், மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகிறது.
அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு மருத்துவ மற்றும் அலிம்கோ நிறுவனம் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்குவதற்கான மதிப்பீட்டு முகாம் வரும் 24-ம் தேதி முதல் அடுத்த மாதம் 12-ம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
அதன்படி வரும் 24-ம் தேதி நரிமேட்டில் உள்ள ஓ.சி.பி.எம்.பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 25-ம் தேதி பெரியார் பஸ் நிலையம் அருகில் உள்ள மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியிலும், 26-ம் தேதி பழங்காநத்தம் டி.வி.எஸ்.மெட்ரிகுலேசன் பள்ளியிலும் முகாம் நடக்கிறது.
27-ம் தேதி வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும், 28-ம் தேதி கொட்டாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும், 29-ம் தேதி ஒத்தக்கடை உலகனேரி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியிலும் முகாம் நடக்கிறது. 30-ம் தேதி திருப்பாலை யாதவா கல்லூரியிலும், அக்டோபர் 1-ம் தேதி பாத்திமா கல்லூரியிலும், 6-ம் தேதி தியாகராஜர் கல்லூரியிலும், 7-ம் தேதி திருமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைபள்ளியிலும், 8-ம் தேதி மேலூர் அரசு கல்லூரியிலும் முகாம் நடக்கிறது.
10-ம் தேதி பேரையூர் அரசு மேல்நிலைபள்ளியிலும், 11-ம் தேதி உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளியிலும், 12-ம் தேதி திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைபள்ளியிலும் முகாம்கள் நடக்கிறது.
இதில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தங்களுக்கு தேவையான உபகரணங்களை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க:
Share your comments