நீங்கள் அலுவலக ரீதியாக வேலை செய்யும் பணியாளராக இருந்து, பிஎஃப் கணக்கும் வைத்திருந்தால், இந்த செய்தி உங்களுக்கானது, என்ன நற்ச்செய்தி அறிந்திடுங்கள். பிஎஃப் கணக்குகளை நிர்வகிக்கும், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் கணக்கில் வட்டிப் பணத்தைப் டெபாசிட் செய்தது. இதன் மூலம் 6 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
பிஎஃப் கணக்கில் வட்டி பணம் வந்துள்ளது (PF holder's has received interest on the account)
2021-22 நிதியாண்டில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு அதாவது (EPFO) 22.55 கோடி PF கணக்கு வைத்திருப்பவர்களின் கணக்கிற்கு 8.50 சதவீத என்ற கணக்கில் வட்டியை வழங்கியுள்ளது. சமீபத்தில், ஓய்வூதிய நிதி அமைப்பு ஒரு ட்வீட்டில், '2020-21 நிதியாண்டில் 22.55 கோடி கணக்குகளில் 8.50 சதவீத வட்டி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது' என்று கூறியது. நீங்களும் PF கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், இந்த செயல்முறைகளில் ஏதேனும் ஒன்றைப் பின்பற்றி உங்கள் கணக்கின் இருப்பைச் சரிபாருங்கள், நீங்களும் பயனடைந்திருக்கலாம்.
மிஸ்டு கால் மூலம் உங்கள் இருப்பைச் சரிபார்க்க (Check your Status by Missed call)
நீங்கள் PF கணக்கு வைத்திருப்பவராக இருந்து, உங்கள் மொபைல் எண் உங்கள் PF கணக்குடன் இணைக்கப்பட்டிருந்தால், UAN எண் இல்லாமலும் உங்கள் PF கணக்கு இருப்பு பற்றிய தகவலைப் நீங்கள் பெற்றிடலாம்.
இதற்கு, EPFO கணக்கு வைத்திருப்பவர்கள், 011-22901406 என்ற எண்ணில் மிஸ்டு கால் செய்ய வேண்டும், அதன் பின்னர், தங்கள் கணக்கின் இருப்பை அறிந்துக்கொள்ளலாம். இந்த எண்ணுக்கு நீங்கள் மிஸ்டு கால் செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் PF கணக்கு இருப்புத் தகவல் சிறிது நேரத்திற்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட எண்ணுக்கு SMS வந்துவிடும்.
அனைத்து PF சந்தாதாரர்களும் EPFO இன் SMS வசதியைப் பயன்படுத்திக்கொண்டு தனது PF கணக்கின் நிலையை சரிபார்க்கலாம். இதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை, 77382-99899 என்ற எண்ணுக்கு 'EPFOHO UAN' என்று SMS செய்ய வேண்டும். SMS செய்தவுடன், உங்கள் UAN எண் மற்றும் PF கணக்கு (PF Account) இருப்புத் தகவல் பற்றிய முழு விவரமும், சிறிது நேரத்திற்குள் உங்கள் எண்ணுக்கு அனுப்பப்படும்.
இணைத்தளத்தில் எப்படி சரிபார்ப்பது (How to check on the website)
மேலும், இணையத்தள வாயிலாகவும் நீங்கள் இதை சரிபார்க்கலாம் அதற்கு, EFPO-வின் ஆதிகாரப்பூர்வமான தளத்திற்கு சென்று, உங்கள் UAN எண் மற்றும் நீங்கள் பதிவு செய்த உங்கள் கடவுச்சொல்லை உள்ளிட்டு, தகவல்களை பெறலாம்.
மேலும் படிக்க:
இந்த தொழில் தொடங்க, அரசு 85% மானியம் வழங்குகிறது
விவசாயிகளின் பயிர்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவிப்பு
Share your comments