மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் (21-02-2022) திங்கள்கிழமை வங்கி அமைப்பு பற்றி ஒரு பெரிய தகவலை தெரிவித்தார். வாடிக்கையாளர்களின் தேவைகளை மனதில் கொண்டு, வங்கி முறையை எளிமையாக்குவது குறித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தினார். வங்கிகள் வாடிக்கையாளர்களின் வசதிக்காக அதிக கவனம் செலுத்தி, அதன் மூலம் கடன் வாங்குபவர்களுக்கு செயல்முறை எளிதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
சுலபமாக கடன் வழங்குவதற்கான பரிந்துரை (Recommendation for easy lending)
வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்கும் தரத்தில் வங்கிகள் தளர்ச்சி அடையக் கூடாது என்றும் நிதியமைச்சர் அறிவுறுத்தினார். தொழில்துறை பிரதிநிதிகள் மற்றும் நிதியமைச்சர் இடையேயான சந்திப்பில், வங்கி வணிகத்துடன் தொடர்புடைய ஸ்டார்ட்அப் நிறுவனர் ஒருவர் எந்த பிரச்சனையும் இல்லாமல் கடன் வழங்கும் செயல்முறையை நடைமுறைப்படுத்த வலியுறுத்தினார். நிதியமைச்சரின் இந்த ஆலோசனை அமல்படுத்தப்பட்டால் SBI, HDFC, ICICI உள்ளிட்ட அனைத்து வங்கிகளின் வாடிக்கையாளர்களும் பயனடைவார்கள் என்பது குறிப்பிடதக்கது.
இது குறித்து SBI தலைவர் தினேஷ் குமார் காரா கூறுகையில், ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் குறிக்கோள் அதிக ஈக்விட்டிய்ல் இருப்பதாக குறிப்பிட்டார். போதுமான சமபங்கு இருந்தால் கடன் தருவதாக அவர் உறுதியும் அளித்தார். பின்னர், குறு மற்றும் சிறு நிறுவனங்களுக்கான அரசின் கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையையும் அவர் குறிப்பிட்டு கூறினார்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!
வங்கியில் டிஜிட்டல் மயமாக்கல் செயல்முறை அதிகரித்து வருவதாகவும், முழு செயல்முறையும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது. இது அனைத்து செயல்முறைகளையும் எளிதாக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அடுத்த இரண்டு மாதங்களில் வங்கிகள் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும். நம்பகமான பணப்புழக்கத்தைக் கருத்தில் கொண்டு, சிறு வணிகத் துறைகளுக்கான கடன் வளர்ச்சி தனிநபர் கடன் எண்ணிக்கையை எட்டக்கூடும் என தெரிகிறது.
RBI update: கிரெடிட், டெபிட் கார்டு 'டோக்கனைசேஷன்' காலக்கெடு நீட்டிப்பு
நிதிச் சேவைத் துறையில் பணிபுரிந்த வருவாய்த் துறை செயலர் தருண் பஜாஜ், வங்கிகள் அதிகக் கடன் வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் எனவும் மேலும், நிறுவனங்களின் நிலையும் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க:
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு.. டவுன்லோட் லிங்க் இதோ!
Share your comments