இந்தியாவில் கொரோனா (Corona) பாதிப்பை கட்டுப்படுத்தும் வண்ணம் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு (Lockdown) பிறப்பிக்கப்பட்டது. இதனால், பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. ஏராளமானோர் வேலையிழக்கும் சூழல் ஏற்பட்டது. இதையொட்டி மத்திய அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.
இலவச உணவுப் பொருட்கள்:
ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக உணவுப் பொருட்கள் (free Food items) வழங்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டார்.
இலவச கொண்டை கடலை:
PHH/AAY ரேஷன் அட்டைதாரர்களுக்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள உத்தரவில், மத்திய அரசின் திட்டமான PMGKAY-II திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2020 முதல் நவம்பர் 2020 வரையிலான 5 மாதங்களுக்கு ஒரு மாதத்திற்கு தலா ஒரு கிலோ வீதம் மத்திய தொகுப்பில் இருந்து கோவிட்-19 நிவாரணமாக கொண்டைக் கடலை (Channa) PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் பொருட்டு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த கொண்டைக் கடலை மத்திய தொகுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு NAFED நிறுவனம் மற்றும் இக்கழக உள்மண்டல இயக்கம் மூலம் அனைத்து மண்டலங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. மத்திய தொகுப்பிலிருந்து பெறப்பட்ட கொண்டைக் கடலை டிசம்பர் 2020 மாதத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் PHH/AAY குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப அட்டைக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட வேண்டும்.
முன்நகர்வுக்கு உத்தரவு
நவம்பர் 21ஆம் தேதி முதல் அனைத்து மண்டல கிடங்குகளில் இருந்தும் சில்லறை அங்காடிகளுக்கு கொண்டைக் கடலை அனுப்பப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை (Department of Food Supply and Consumer Protection), தமது கடிதத்தில் மேற்குறிப்பிட்ட திட்டத்தின் கீழ் பெறப்படும் கொண்டைக் கடலை அனைத்து கிடங்குகளில் இருப்பு வைக்கவும், இதையொட்டி முன்நகர்வு செய்யவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உரிய அறிவுரை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பூச்சியின் சத்தம் மூலம், 140 பூச்சி இனங்களின் பரிணாம வளர்ச்சி பற்றி ஆய்வு!
வெண்டைக்காய் விலை குறைவு! வேதனையில் ஆற்றில் கொட்டிய விவசாயிகள்!
Share your comments