தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி வருகின்ற 14-ஆம் தேதி வாக்கில் உருவாகக்கூடும். மேலும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாகவும் இன்று சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து குறைவான மழைப்பொழிவு பெற்று வந்த சென்னை, இன்று நள்ளிரவு முதல் 15-நவம்பர் வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வெதர்மேன் (தன்னார்வ வானிலை ஆய்வாளர் ) தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்று காலை 10 மணியளவில் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னை, கடலூர்,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரங்கள் மழையினை எதிர்ப்பார்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றைய தினம் வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பு விவரம் பின்வருமாறு:
14.11.2023 மற்றும் 15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 17.11.2023 மற்றும் 18.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: (வங்க கடல் பகுதிகள்)
13.11.2023: அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 14.11.2023: தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள், அதை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு Mausam.imd.gov.in/Chennai என்கிற இணையதளத்தை காணவும் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இதையும் காண்க:
மகளிருக்கான 1000 ரூபாய்- பயனாளிகளின் எண்ணிக்கை உயர்வு
சம்பாவைத் தொடர்ந்து நவரை பயிர் காப்பீடுக்கான இறுதி தேதி அறிவிப்பு!
Share your comments