1. செய்திகள்

Good news for TNPSC exam writers! Coaching facility at home

T. Vigneshwaran
T. Vigneshwaran
TNPSC Exam

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் துவக்கி வைத்தார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை கல்வித் தொலைக்காட்சி மூலம் அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் கட்டணமில்லா பயிற்சி வழங்குவது குறித்து சட்டமன்றக் கூட்டத் தொடரின் போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசனால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இதற்கான அரசாணைகள் 07.01.2022 அன்று வெளியிடப்பட்டது.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இயங்கும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக நடத்தப்படும் அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப்பணி போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியில் துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் இளைஞர்கள், அரசுத்துறை பணியினைப் பெற மேலும் சிறப்பாகவும் எளிய வழிமுறையிலும் அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான நடவடிக்கையாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறையுடன் இணைந்து போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகளை கல்வித் தொலைக்காட்சியின் மூலம் 20.03.2022 இன்று முதல் தொடர்ந்து ஒளிப்பரப்பப்பட உள்ளது.

இப்பயிற்சி வகுப்புகள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழ் நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம், ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம், ரயில்வே தேர்வு வாரியம், வங்கி தேர்வாணையம், ஒன்றியத்தின் பணியாளர் தேர்வாணையம் போன்ற பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையில் இருக்கும்.

இளைஞர்களுக்குத் தேவையான கட்டணமில்லா பயிற்சியுடன் ஊக்கப்படுத்தும் உரைகள், ஆளுமை வளர்ச்சி, நேர்முக தேர்வுக்காக தயார் செய்தல், கலந்துரையாடல்கள், முந்தைய ஆண்டுகளின் வினாத்தாளினை கூர்ந்து ஆய்வு செய்தல் ஆகிய பல்வேறு நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் 9 மணி வரையிலும், மீண்டும் இந்நிகழ்ச்சி மாலை 7 மணி முதல் 9 மணி வரை மறுஒளிபரப்பும் செய்யப்படும்.

பல்வேறு தேர்வு முகமைகளால் நடத்தப்படும் தேர்வுகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் அதிகமாக வெற்றி பெற இம்முயற்சி வழிவகுக்கும். தமிழ்நாட்டின் தொலைதூரத்தில் வசிக்கும் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இப்பயிற்சி வகுப்புகள் பயன் அளிக்கும்.

மேலும் படிக்க

Lister app: வீடு தேடி ரேஷன் பொருட்கள் வந்து சேரும்.

English Summary: Good news for TNPSC exam writers! Coaching facility at home Published on: 23 March 2022, 06:01 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.