தமிழகத்தின் பழநி பஞ்சாமிர்ததிற்கும், கேரளாவின் திரூர் வெற்றிலைக்கும் புவிசார் குறியீடு வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தமிழக மற்றும் கேரளா மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது.
புவிசார் குறியீடு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தை குறிக்கும்படி, உள்ள பொருளுக்கு புவிசார் குறியீடு மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த பொருள் தனித்தன்மையுடனும், மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருக்க வேண்டும்.மேலும் புவிசார் குறியீடு வழங்கிய பொருளை சம்பந்தப்பட்ட பகுதியைத் தவிர, மற்ற பகுதிகளில் அதே பெயரில் உற்பத்தி செய்யவோ, சந்தைப்படுத்த முயல்வது சட்டத்திற்கு புறம்பானதாக கருதப்படும்.
புவிசார் குறியீடு பெற்ற பொருட்களுக்கு மதிப்பு அதிகரிப்பதோடு, அதன் உற்பத்தி மற்றும் விலையும் நிர்ணயிக்கப்படுவதால், அதுசார்ந்த அல்லது தொடர்புடைய மக்களுக்கு அதிக வருவாய் ஈட்டி தருவதுடன் , உலக சந்தையில் அதன் மதிப்பும் உயருகிறது.
முதன்முறையாக கோவில் பிரசாதத்திற்கென்று புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பழநி பஞ்சாமிர்தத்தின் தனித்துவமான சுவைக்கு இத்தகைய அங்கீகாரம் கிடைத்திருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாகும். அதே போன்று கேரளாவின் திரூர் வகை வெற்றிலைக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வகை வெற்றிலை திரூர், தனூர், திருரங்காடி, குட்டிபுரம், மலப்புரம் மற்றும் வெங்காரா பகுதிகளில் அதிகம் விளைவிக்கப்படுகிறது. அதிக மருத்துவ குணங்களை உள்ளடக்கியதால் இவ்வகை வெற்றிலைக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளன.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments