சர்க்கரைத் துறையின் நம்பகத்தன்மையை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் மூலம் சர்க்கரை ஆலைகள், கரும்பு விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை உரிய நேரத்தில் வழங்க முடியும்.
அந்நிய செலாவணியை குறைக்க நடவடிக்கை
ஒரு படி மேலே சென்று, உபரிக் கரும்பு மற்றும் அதிகப்படியான சர்க்கரையை இருப்பு வைத்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு நீண்ட கால தீர்வு காணவும், சர்க்கரைத் தொழிலின் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், உபரிக் கரும்பை மாற்று முறையில் பயன்படுத்த ஆலோசிக்கப்படுகிறது. பசுமை எரிபொருளான (Green Fuel) எத்தனாலை (Ethanol) பெட்ரோலுடன் (Pertrol) கலந்து பயன்படுத்துவதால், நாட்டின் அந்நியச் செலாவணி பெருமளவுக்கு மிச்சமாகும்.
மத்திய உணவு மற்றும் பொது விநியோகத்துறைச் செயலர், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகச் செயலர், நிதிச் சேவை துறைச் செயலர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முன்னணி வங்கிகள், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்கள், முக்கிய கரும்பு உற்பத்தி மாநிலங்களின் கரும்பு ஆணையர்கள், சர்க்கரைத் துறை சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
பெட்ரோலுடன் எத்தனாலைக் கலக்கும் விகிதத்தை அதிகரிப்பது பற்றிய அரசின் நோக்கத்தை எட்டுவது குறித்தும், எண்ணெய் சந்தைப்படுத்துதல் நிறுவனங்களுக்கு எத்தனால் விநியோகத்தை அதிகரிக்கும் வழி வகைகள் பற்றியும் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்ட்டது.
எத்தனால் உற்பத்தியாளர்கள் (சர்க்கரை ஆலைகள்), எத்தனாலை வாங்குபவர்கள் (எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள்) , கடன் வழங்குவோர் (வங்கிகள்) ஆகியவை முத்தரப்பு ஒப்பந்தம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில் இதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டது.
கடன் திட்டங்கள் அதிகரிப்பு
இதில் உற்பத்தி, கொள்முதல், மூன்றாம் தரப்புக் கணக்கு மூலம் பணம் வழங்குதல் போன்றவை அடங்கும். பெரிய அளவில் லாபம் ஈட்டாத சர்க்கரை ஆலைகளுக்குக் கூட கடன் வழங்க வங்கிகள் பரிசீலிக்கலாம். ஆலைகள் புதிய வடி ஆலைகளை அமைக்கவும், ஏற்கனவே இருக்கும் வடி ஆலைகளை விரிவுபடுத்தவும், இதன் மூலம் நாட்டின் மொத்த வடிதிறனை அதிகரிக்கவும் ஆலைகள் கடன்களை வாங்குவதற்கு இது உதவும். இதன் மூலம், பெட்ரோலுடன் எத்தனால் கலப்புத் திட்டத்தின் கீழ் கலப்பு இலக்கை எட்டவும் இது உதவும். நடப்பு ஆண்டிலும், இனி வரும் காலத்திலும், எத்தனால் விநியோகத்தை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று மாநிலங்களும், தொழிற்சாலைகளும் உறுதியளித்தன.
எத்தனால் வடிதிறன் அதிகரிப்பு
கலப்பு இலக்கை எட்டுவதைக் கருத்தில் கொண்டு, சர்க்கரை ஆலைகள் மற்றும் மொலாசஸ் அடிப்படையிலான வடி ஆலைகள், தங்கள் எத்தனால் வடிதிறனை அதிகரிக்க அரசு ஊக்கமளித்து வருகிறது. எத்தனால் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், 600 கோடி லிட்டர் அளவுக்குத் திறனை அதிகரிக்கும் வகையிலான 362 திட்டங்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.18,600 கோடி அளவுக்கு குறைந்த வட்டியிலான கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதில், ரூ.4045 கோடி அளவிலான வட்டி மானியத்தை அரசு ஏற்றுக் கொள்கிறது. இதுவரை 64 திட்டங்களுக்குக் கடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டப்பணிகள் நிறைவடைந்ததும், இன்னும் இரண்டு ஆண்டுகளில் எத்தனால் வடிதிறன் 165 கோடி லிட்டர் அதிகரிக்கும். இதன் மூலம், நாட்டின் எத்தனால் வடிதிறன், ஆண்டுக்கு 426 கோடி லிட்டரில் இருந்து 2022-ஆம் ஆண்டுக்குள் 590 கோடி லிட்டராக உயரும்.
மேலும் படிக்க...
ஊரடங்கால் வேலையிழந்தோருக்கு ESIC மூலம் 50% சம்பளம் - 3 மாதங்கள் வழங்க மத்திய அரசு முடிவு!!
கிசான் கிரெடிட் கார்டு மூலம் ரூ.1,02,065 கோடி சலுகை கடன்- மத்திய அரசு!!
கொரோனா நெருக்கடியிலும் காரீஃப் விதைப்பு அதிகரிப்பு!!
Share your comments