பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக முழு கரும்பு ரூ.15-க்கு கொள்முதல் செய்கிறது தமிழக அரசு. அரசின் நேரடி கொள்முதல் (Direct purchase) நடவடிக்கையை விவசாயிகள் வரவேற்றுள்ளனர். இதனால் எண்ணற்ற கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள்.
கரும்பு நேரடி கொள்முதல்:
பொங்கல் பரிசுத் தொகுப்புக்காக ஒரு முழு கரும்பு (Sugarcane) 15 ரூபாய் வீதம், இடைத்தரகர்கள் இல்லாமல் அரசே கொள்முதல் செய்வது மகிழ்ச்சியளிப்பதாக மயிலாடுதுறை (Mayiladuthurai) மாவட்ட விவசாயிகள் தெரிவித்தனர். வழக்கமாக துண்டுக் கரும்புகளை தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்களிடமிருந்து பெற்று அரசு விநியோகம் செய்து வந்தது. இம்முறை முழு கரும்பை, 15 ரூபாய் வீதம் அரசே நேரடியாக கொள்முதல் செய்வதால், தங்களுக்கு போதிய லாபம் (Profit) கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.
விவசாயிகள் வரவேற்பு:
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதி விவசாயிகளும் அரசின் நேரடி கொள்முதல் நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். விவசாயிகளின் அனைத்துப் பயிர்களுக்கும், அரசே நேரடியாக கொள்முதல் செய்தால், அதை விட ஆனந்தம் இல்லை.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
மருத்துவ குணம் வாய்ந்த கருப்பு கவுனி நெல் சாகுபடி! கள பயிற்சியில் மாணவர்கள்!
தேனீ வளர்ப்பில் நேரத்தை மிச்சப்படுத்த வந்துவிட்டது நவீன ரோபோ!
முளைக்கும் நிலக்கடலையை சரியாகப் பிரித்து மகசூலை அதிகரிப்பது எப்படி?
Share your comments