தமிழகத்தில் கடந்த 10ம் தேதி முதல் பேருந்து இயங்காத நிலையில், கொரோனா பரவல் குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் நகர பேருந்துளை இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக கடந்த மே மாதம் 10ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை படிபடியாக குறைய தொடங்கியுள்ளது, இதைதொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று அதிகம் உள்ள கோவை, நீலகிரி, திருப்பூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
27 மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து
இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்து, மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில், நகர பேருந்துகள் மட்டும் இயக்க அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்திற்குள் மட்டும் 50 சதவீத பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ள தமிழக அரசு, இந்த வார இறுதிக்குள் அதற்கான அறிவிப்பு வெளியிட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 10ம் தேதி முதல் பேருந்து போக்குவரத்து இயங்காத நிலையில், 27 மாவட்டங்களில் பல தளர்வுகள் அளிக்கப்பட்டிருப்பதால் பேருந்து போக்குவரத்து சேவைக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிடிக்க...
மீன்பிடி தடை காலம் நிறைவு: கடலுக்கு சென்ற மீனவர்கள்!!
மக்கள் கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்! முதல்வர் எச்சரிக்கை!
Share your comments