தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகம் அதன் உரிமைகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது, மீனவர்கள் மற்றும் விவசாயிகள் நலனில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்பன உள்ளிட்ட பல்வேறு தகவல்களை ஆளுநர் தனது உரையில் தெரிவித்தார்.
கலைவாணர் அரங்கில் சட்டப்பேரவை கூட்டம்
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், சேப்பாக்கம் கலைவாணர் அரங்கிலேயே, சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகின்றது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் தொடங்கியது.
அனைவருக்கும் கொரோனா பரிசோதனை
இதில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதற்காக, சேப்பாக்த்தில் உள்ள கலைவாணர் அரங்கம் அமைந்துள்ள பகுதியில் அதிகாலை முதலே பாதுகாப்பிற்காக போலீசார் குவிக்கப்பட்டனர். தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்கும் அனைவருக்கும், கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆற்றிய உரையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்கள்!
கொரோன - தமிழக அரசு சிறப்பான நடவடிக்கை
கோவிட்டிற்கு எதிராக அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்த பெருமை முதலமைச்சரையே சாரும். சரியான நேரத்தில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் நோயை எதிர்கொள்ள பொது சுகாதார கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு, அது பலனளித்தது என்றார்.
மேகதாது அணை கூடாது
தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு தொடர்ந்து பாதுகாக்கும். காவிரியிலோ, அதன் கிளை நதிகளிலோ அணைகளியோ, திசை திருப்பும் அமைப்புகளை கட்டக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது அணை திட்டத்தை நிராகரிக்க வேண்டும்.
காவிரி காப்பாளன்
காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக காவிரி - வெள்ளாறு இணைப்புப் பணிகள் விரைவில் துவங்கப்படும். மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்தின் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும். முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு "காவிரி காப்பாளன்" என்ற பட்டத்திற்கு பொருத்தமானவர் என்றும் குறிப்பிட்டார்.
மீனவர்கள் பாதுகாப்பு
ஆழ்கடலில் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது தமிழக மீனவர்களின் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் படகு மோதிய விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 12 மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
தமிழ்நாடு அரசு, ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் தமிழக அரசு 1,000 கோடி ரூபாயை மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்யும்.
மாநிலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் மார்ச் மாத இறுதிக்குள்ளும் மீதமுள்ள கிராமங்களில் நவம்பர் மாத இறுதிக்குள்ளும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.
கூட்டத்தொடர் புறக்கணிப்பு
சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும் எதிர்கட்சியினர் அமலியில் ஈடுபட்டனர். இது முறையல்ல என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியபோதும், திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்களைத் தொடர்ந்து, விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ் உறுப்பினர்களும் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரம் 5ம் தேதி வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி கால்நடை மருந்தகத்தில் போடப்படும் - நாமக்கல்லில் அறிவிப்பு!
ராமநாதபுரத்தில் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து அறிய செயல் விளக்க பண்ணை அமைப்பு!
5 லட்சம் காய்கறி நாற்றுகள் விற்பனை இலக்கு - தோட்டக்கலைத்துறை ஏற்பாடு!
Share your comments