நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%லிருந்து 22%ஆக உயர்த்த மத்திய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளரிடம் பேசிய உணவுத்துறை அமைச்சர் காமராஜ், இந்த ஆண்டு மேட்டூர் அணை குறித்த நேரத்தில் திறக்கப்பட்டதை காரீஃப் காலத்தில் அதாவது செப்டம்பர் இறுதிவரை 2,135 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் 32 லட்சத்து 41 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாகவும், இதன் மூலம் 6 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இது வரை ரூ.6,130 கோடி விவசாயிகளின் வங்கி கணக்குக்கு ஒரே நாளில் பணம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.
மேலும் கடந்த அக்டோபர் 1-ந் தேதி தொடங்கி 20 நாட்களில் 842 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் மூலம் 2 லட்சத்து 37 ஆயிரம் டன் அதாவது 60 லட்சம் மூட்டை நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அனைத்து நெல் மூட்டைகளும் கொள்முதல் செய்யப்படும்!
விவசாயிகளிடம் அனைத்து நெல் மூட்டைகளையும் அரசு கொள்முதல் செய்யும் எனவும் நாளொன்றுக்கு 5 லட்சம் நெல் மூட்டைகள் 2,135 கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
ஈரப்பத அளவை உயர்த்த பரிந்துரை!
விவசாயிகளிடம் பெறக்கூடிய நெல் மத்திய அரசின் விதிமுறைப்படி 17 சதவீதம் ஈரப்பதம் இருக்கக்கூடிய நெல்கள் மட்டுமே கொள்முதல் செய்ய வேண்டும் என்ற நிலையில் மத்திய அரசு அதனை 22 சதவீதமாக உயர்த்த வேண்டுமென தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய அரசு குழு விரைவில் தமிழகம் வர இருப்பதாகவும் அப்போது பெறக்கூடிய நெல்லின் ஈரப்பதம் அளவு 22 சதவீதம் வரை இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மேலும் படிக்க...
செங்கல்பட்டு மாவட்டம் மாடம்பாக்கத்தில், 33 ஏக்கரில் இயற்கை தோட்டம் !!
குழாய் கிணறு, துளை கிணறு அமைக்க ரூ.25 ஆயிரம் வரை மானியம் - பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு!!
வெங்காய அழுகல் நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள் - தோட்டக்கலை துறை அறிவுரை!!
Share your comments