1. செய்திகள்

அரசு பள்ளியில் வேலைவாய்ப்பு: உடனடியாக நிரப்ப பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

R. Balakrishnan
R. Balakrishnan
Government

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

வேலைவாய்ப்பு (Job Offers)

மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வுக்கு முழுமையாக தயார் செய்வதற்கு உதவும் வகையிலும் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு தான் பட்டதாரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

அதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை "எண்ணும் எழுத்தும்" திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறைவுற்று காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும். பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக ஜூலை 1-ம் தேதி முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களின் விவரங்களின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4,989 இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை 10 மாதங்களுக்கும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை எட்டு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். மாத மதிப்பூதியம் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும். அந்தந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பாடத்திற்கு தகுதியான நபர்களை மட்டுமே குழுவின் மூலம் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வு செய்து நிரப்பிக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

ரேஷன் கடையில் புதிய மாற்றம்: அரிசிக்கு பதிலாக கேழ்வரகு!

PF உயரும்: ஆனா டேக் ஹோம் சம்பளம் குறையும்: அமலுக்கு வரும் புதிய விதி!

English Summary: Government School Employment: School Education Order to Fill Immediately! Published on: 24 June 2022, 08:48 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.