சென்னை: தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 99-வது பிறந்தநாள், அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. சமீபத்தில் சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதன்படி இன்று ஜூன் 3-ந்தேதி கருணாநிதி பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட வருகிறது.
இன்று, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள (Karunanidhi) கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
டிரோன் (Drone) மூலமாக கருணாநிதியின் சிலைக்கு பூக்கள் தூவப்பட்டன. முதல்வரை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் (DMK Ministers), எம்பிக்களும் (MP's) மரியாதை செலுத்தினர்.
மேலும் (Karunanidhi) கருணாநிதி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்ட மலர் கண்காட்சியை உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். கலைவாணர் அரங்கில் இன்று ஜூன் 3-ந்தேதி முதல் 5-ந்தேதி வரை 3 நாட்கள் மலர் கண்காட்சி நடக்கும். இதற்காக ஊட்டி(Ooty), ஓசூர்(Osore), திண்டுக்கல் (Dindugul), பெங்களூரு (Bangaluru), புனே (Pune) போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கொண்டு வரப்பட்டு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக அரசு சார்பில் சென்னையில் பிரம்மாண்ட மலர் கண்காட்சி (Flower Show) நடைபெறுவது, இதுவே முதல்முறை ஆகும். சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், இந்த மலர் கண்காட்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (வெள்ளிக்கிழமை) துவக்கி வைக்க இருந்த நிலையில், மாறாக உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த கண்காட்சியில், பழங்களில் பல கலை வடிவங்களை செய்து பார்வைக்கு வைத்துள்ளனர். இதில், குறிப்பாக தர்பூசனிப்பழத்தை முழுவதுமாக உபயோகிக்காமல் மேற்ப்புறத்தை மட்டும் உபயோகித்து அழகாக செதுக்கியுள்ளனர், இவ் கலைகள் கண்ணை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
பிரம்மாணட மலர் கண்காட்சி கட்டணம் (Flower Show Entry Fee):
மாணவர்கள் | ரூ. 20 |
பெரியவர்கள் | ரூ. 50 |
மேலும் படிக்க:
தமிழ் சங்கம்: பிரதமர் வருகையும், இளையராஜா பாட்டு கச்சேரியும்! அறிந்திடுங்கள்
Share your comments