GST for Rented House
நாட்டில் ஜிஎஸ்டி வரி அமலுக்கு வந்து 5 ஆண்டுகளை கட்ந்துள்ள நிலையில், மத்திய அரசு கிட்டத்தட்ட பெட்ரோலைத் தவிர அனைத்திற்கும் ஜிஎஸ்டி வரியை விதித்துள்ளது. ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகை வீடுகளுக்கும் 18 சதவீதம் ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஜிஎஸ்டி (GST)
இந்தியாவில் 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தின் பரிந்துரைகளின்படி, வாடகைக்கு குடியிருக்கும் வீட்டுக்கும் வரி கட்டவேண்டும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜிஎஸ்டி.,யின் கீழ் பதிவு செய்த வாடகைதாரர் மாத வாடகை வழங்கும்போது ஜிஎஸ்டி வரியாக 18 சதவீதம் செலுத்த வேண்டும். இந்த புதிய விதிமுறை கடந்த ஜூலை 18ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. ஆனால், இந்த விதிமுறை ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள வாடகைதாரருக்கு மட்டுமே பொருந்தும்.
தனி நபர் சொந்த பயன்பாட்டுக்காக வாடகைக்கு வீடு எடுத்திருந்தால் ஜிஎஸ்டி வரி பொருந்தாது. வணிக நோக்கத்துக்காக வீடு வாடகை எடுத்திருந்தால் வரி செலுத்த வேண்டும்.
முன்னதாக, கமர்சியல் பயன்பாட்டிற்கான அலுவலகம் மற்றும் தொழில், பொது பயன்பாட்டிற்காக லீசுக்கு விடுதல் போன்றவற்றுக்கு வாடகைக்கு விடப்படும் சொத்துக்களுக்கே இதுவரை ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க
அரசு ஊழியர்களுக்கு கணிணி பயிற்சி: மைக்ரோசாப்ட் நிறுவனம் தயார்!
அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாற்றம் எப்போது? முக்கிய தகவல்!
Share your comments