1. செய்திகள்

வேகமெடுக்கும் கொரோனா- இந்த ஆண்டு பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar

நாடாளுமன்ற மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவு மற்றும் நாடாளுமன்ற ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா என எங்கும் கொரோனா மயமாக இருப்பதால், இந்த முறைத் திட்டமிட்டபடி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதிலும் சிக்கல் நீடிக்கிறது.

2 வாரங்களுக்கு முன்பு (2 weeks ago)

மத்திய பட்ஜெட் வரும் 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது.
நாடாளுமன்றத்தில் ஆண்டுதோறும் தாக்கல் செய்யப்படும் மத்திய பட்ஜெட்டானது அதிகமான பக்கங்களில் அச்சிடப்பட்டு துணிப்பைகளில் கட்டப்படும். இந்த அச்சிடும் பணிகள் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.

டிஜிட்டல் பட்ஜெட் (Digital budget)

பட்ஜெட் ஆவணங்களில் நூற்றுக்கணக்கான பிரதிகள் அச்சிடப்படுவதால் ஏராளமான காகிதம் உள்ளிட்ட பொருட்களின் தேவை உள்ளது. இதையடுத்துக் காகிதப் பயன்பாட்டை குறைக்கும் வகையில் டிஜிட்டல் முறையில் பட்ஜெட் ஆவணங்களை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதன் விளைவாக கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் மத்திய பட்ஜெட்டை டிஜிட்டல் முறையில் தாக்கல் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
.அனைத்தும் 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்டது. பட்ஜெட் ஆவணங்களை பார்ப்பதற்காக எம்.பி.,க்களுக்கு என தனியாக செயலி உருவாக்கப்பட்டது.இதற்கென,தனி 'செயலி'பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி, பட்ஜெட் தாக்கல் தினத்துக்கு 10 நாட்களுக்கு முன் துவங்கும். இந்த பணி துவங்குவதை குறிக்கும் வகையில் 'அல்வா கிண்டும்' நிகழ்ச்சி நடக்கும்.

நிகழ்ச்சி ரத்து (Show cancelled)

வழக்கமாக பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை 'சூட்கேசில்' வைத்து மத்திய நிதி அமைச்சர் எடுத்து வருவார். அதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாற்றினார். துணிப் பையில் வைத்து எடுத்து வந்தார். கடந்தாண்டு 'டேப்லெட்'டை பையில் வைத்து எடுத்து வந்தார்.தற்போது ஆவண பாதுகாப்புக்காக மட்டும் சில பிரதிகள் மட்டுமே அச்சடிக்கப்பட உள்ளன.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்தாண்டு அல்வா கிண்டும் நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பட்ஜெட் தாக்கலாகுமா?

இதனிடையே மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு கொரோனா, ஊழியர்கள் 100க்கும் மேற்பட்டோருக்கும் கொரோன என எங்கும் கொரோனா மயமாக இருப்பதால், இந்த முறைத் திட்டமிட்டபடி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதிலும் சிக்கல் நீடிக்கிறது. முன்பெல்லாம் இந்த முறை பட்ஜெட்டில் குறிப்பிட்ட அம்சங்கள் இடம்பெறுமா? என எதிர்பார்த்தநிலை மாறி, இம்முறை பட்ஜெட்டேத் தாக்கலாகுமா என எதிர்பார்க்கும் நிலை உருவாகிவிட்டது.

மேலும் படிக்க...

பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு, உர மானியத்தின் நிலவரம் 

பட்ஜெட் 2022: விவசாய சட்டங்களை ரத்து செய்த பிறகு, விவசாயத் துறையை மேம்படுத்த நடவடிக்கை

English Summary: Halwa preparation stops-Problem in Budget Filing! Published on: 27 January 2022, 10:27 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.