1. செய்திகள்

நீங்க ஆதார் எடுத்து 10 ஆண்டுகள் கடந்துவிட்டதா? அப்டேட் பண்ணுங்க

T. Vigneshwaran
T. Vigneshwaran
Aadhaar Card

ஆதார் அட்டை எடுத்து 10 ஆண்டை கடந்தவர்கள் தங்களது தகவல்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என UIDAI கேட்டுக்கொண்டுள்ளது.
இந்தப் புதுப்பிப்பை ஆதார் மையங்கள் மட்டுமின்றி ஆன்லைனிலும் செய்யலாம்.

இது குறித்து UIDAI வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “10 ஆண்டுகளுக்கு முன்பு தனிப்பட்ட அடையாள எண் வழங்கப்பட்ட மற்றும் எந்த புதுப்பிப்பும் செய்யாத அட்டைதாரர்கள் தங்கள் ஆவணங்களை புதுப்பித்துக் கொள்ளலாம்.

அட்டைதாரர்கள் தேவையான கட்டணத்தைச் செலுத்தி அடையாள ஆவணம் மற்றும் வசிப்பிடச் சான்றை புதுப்பிக்கலாம். இந்த வசதி ஆதார் போர்டலில் அல்லது ஆதார் மையத்தில் செய்துகொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்த புதுப்பிப்பு கட்டாயமா என்பது குறித்து சட்டப்பூர்வமாக அமைப்பு எதுவும் கூறவில்லை. இந்தியர்களின் தனித்துவமான அடையாள அட்டையான ஆதார்-ஐ புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என முன்பும் UIDAI கேட்டுக்கொண்டது என்பது நினைவு கூரத்தக்கது.

மேலும் படிக்க:

100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு

பெண்களுக்கு கால்நடைகள் 90% மானியம், இதோ விவரம்

English Summary: Has it been 10 years since you took Aadhaar? Please update Published on: 15 October 2022, 07:26 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.