தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் (Meteorological Center) தெரிவித்துள்ளது.
கனமழை
கடும் வெயிலுக்கு மத்தியில் தற்போது தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இவ்வாறு சில இடங்களில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்றும் (வியாழக்கிழமை) பெரும்பாலான இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி சென்னை, செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை முதல் பல்வேறு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை (chennai) மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் சென்னையில் அதிகாலையில் இருந்து பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
சென்னை வாசிகள் மகிழ்ச்சி
இன்று அதிகாலை தொடங்கி சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தி-நகர், கிண்டி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளிலும், அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம், கொளத்தூர், குரோம்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. கிண்டி, சைதாப்பேட்டை, கோடம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், பல்லாவரம், தாம்பரம், சேலையூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி என புறநகர் பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த சென்னை வாசிகள், தற்போது பெய்த மழையால் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தமிழ் புத்தாண்டில் நல்லேர் பூட்டி பாரம்பரிய வழிபாடு செய்த விவசாயிகள்!
தமிழகத்தில் தொடங்கியது கொரோனா தடுப்பூசி திருவிழா
Share your comments