தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாகக் கோவை, மதுரை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7 மாவட்டங்களில் கன மழை
இது குறித்து வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்றி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கடலூர், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்.
கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
-
இன்றும் நாளையும் குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
இன்று முதல் வரும் 8-ம் தேதி வரை கேரளா மற்றும் கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
PM Kisan முறைகேடு: 13 மாவட்டங்களில் வேளாண் துறை அதிகாரிகள் விசாரணை!!
விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?
Share your comments