திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்,'' என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகம் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தென்காசி, தேனி, மதுரை, விருதுநகர், திருச்சி, கரூர், திருப்பூர், நாமக்கல், திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
கடலுார், ராமநாதபுரம், புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன மழையும், கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யவுள்ளது.
அரியலுார், பெரம்பலுார், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, துாத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும். கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டியுள்ள மாவட்டங்கள், தென்மாவட்டங்கள, புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யவுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி காணப்படும்.
வேப்பூர், போடிநாயக்கனுார் தலா 10 செ.மீ., உத்தமபாளையம், காட்டுமயிலுார், கன்னிமார், திருப்பூர் முகாம் அலுவலகம் தலா 9 செ.மீ., பெருஞ்சாணி அணை, சிற்றாறு, புத்தன் அணை, ஸ்ரீவில்லிபுத்துார், உடுமலைப்பேட்டை, வத்திராயிருப்பு தலா 7 செ.மீ., லப்பைக்குடிக்காடு, செட்டிகுளம், ஆண்டிப்பட்டி, கூடலுார், தலா 6 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க:
Tomato Price: பாதிக்கு மேல் குறைந்த தக்காளி விலை! விவசாயிகள் வருத்தம்!
Post Office-இன் சூப்பர்ஹிட் திட்டம், வருமானத்திற்கான உத்தரவாதம்!
Share your comments