Heavy rain warning in Tamil for 5 days from tomorrow
வடகிழக்கு பருவக் காற்று காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள், அதாவது இன்று முதல் டிசம்பர் 17ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் கடலோர மாவட்டங்கள் மற்றும் சில மாவட்டங்களில் மழை பெய்யும், இடங்கள் குறித்த தகவலின் அறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரிக்கடல் பகுதியில் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
டிசம்பர்- 13 மற்றும் 14 வடகிழக்கு பருவக் காற்று காரணமாக இன்று தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் சில இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு அளித்துள்ளது. மேலும் டிசம்பர் 14ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
மேலும் டிசம்பர் 15ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசான மழையும், மற்ற மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது, சென்னை வானிலை ஆய்வு மையம். டிசம்பர் 16ம் தேதி தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் இருக்கும். டிசம்பர் 17ம் தேதி தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளின் சில இடங்களில் மிதமான மழையும், மற்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசான மழையும் இருக்கக்கூடும்.
சென்னை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கான வாய்ப்பு என தெரிவித்துள்ளது, வானிலை ஆய்வு மையம். மேலும் வெப்பநிலையை பொறுத்தவரை அதிகபட்சமாக 31 டிகிரி செல்ஸியசும், குறைந்தபட்சமாக வெப்பநிலை 24 டிகிரி செல்சியசும் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 5ந்து நாட்கள் அதாவது, இன்று முதல் டிசம்பர் 17ம் தேதி வரை குமரிக்கடல் பகுதிகளில் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பபகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர் எனவும் வானிலை ஆய்வு மையம் தனது செய்திக்குறிப்பில் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க:
Weather Report: தமிழகத்தில் லேசான மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்வு: கடனில் உள்ளதா மின் வாரியம்!
Share your comments