1. செய்திகள்

15 மாவட்டங்களில் கொட்டப்போகுது பலத்த கனமழை- வானிலை மையம் எச்சரிக்கை!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Heavy rains expected in 15 districts

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் திருவள்ளூர், வேலூர், கடலூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • குறிப்பாக, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கரூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

  • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

  • நகரின் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

  • கடந்த 24 மணி நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பெருங்கலூர் மற்றும் தஞ்சை மாவட்டத்தின் கீழ் பென்னாத்தூரில் தலா 13 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை (Warning)

  • நாளை 19ம் தேதி மத்திய வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக கூடும். இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு பெற கூடும்.

  • இதன் காரணமாக மத்திய கிழக்கு வங்க கடல், அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் அக்டோபர் 19ம் தேதி சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

  • 20ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல், அதை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு 45-55 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசலாம்.

  • அதேபோல் 21ம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய ஆந்திர கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ வேகத்தில் வீசக்கூடும்.

  • எனவே இந்தப்பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

செரிமானப் பிரச்னை தீர சீரகம்- அக்டோபர் மாதத்தில் பயிரிட சிறந்த மருத்துவ மூலிகை!

இயற்கை உரத்தில் உள்ள சத்துக்கள் சதவீதம் தெரியுமா? விபரம் உள்ளே!

English Summary: Heavy rains expected in 15 districts Published on: 18 October 2020, 03:17 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.