குமரிக்கடல் பகுதியை சுற்றி வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
22, 23-ந்தேதிகளில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
24ஆம் தேதி தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசான மழையும், நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.
25 ஆம் தேதி தமிழகம், புதுவை ஆகிய இடங்களில் லேசான மிதமான மழையும், நீலகிரி, கோவை, திண்டுக்கல், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய கூடும் .
சென்னையை பற்றி பேசினால் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments