மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. மீண்டும் மும்பையை வெளுத்தெடுக்கும் தொடர் கனமழை, புதிய ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பைக்கு மீண்டும் ரெட் அலெர்ட்
தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மீண்டும் வெள்ளக்காடாக மாறிய மும்பை. நேத்து இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
சயன், கிங் சர்க்கஸ் ரயில் நிலையம், காந்தி மார்க்கெட் ஆகிய இடங்களில் இடுப்பளவுக்கு மழை தேங்கியுள்ளது. பாலகர் மாவட்டத்திலும் கனமழை பெய்து வெள்ளக்காடாக மாறியுள்ளது , மற்றும் வியாழக்கிழமை வரை கனமழை பெய்யக்கூடும் என்பதால் ரெட் அலெர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.
மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளன. தண்டவாளங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
செண்டாக்ரூஸில் 6 மணி நேரத்துக்குள் 27 செ.மீ மழை பெய்துள்ளது, இதனால் விமானம் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு தினங்களுக்கு மும்பை மற்றும் அருகிலுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென் மேற்கு பருவ காற்றின் காரணமாக கேரளா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் அடுத்த சில தினங்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் மற்றும் மாலை நேரங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் இருந்து வீசும் காற்றின் தாக்கத்தால் தமிழகம் மற்றும் புதுவையின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது மற்றும் அடுத்த ஒரு சில நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் பரவலான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
K.Sakthipriya
Krishi Jagran
Share your comments