1. செய்திகள்

கொரோனாவுக்கு Tough கொடுக்கும் மூலிகை- ஆய்வில் கண்டுபிடிப்பு!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
Herb that gives Tough to Corona- Discovery in the study!
Credit : Dinamalar

ஹிமாச்சல பிரதேசத்தில் விளையும் ஒருவித மூலிகைச் செடியில் உருவாகும் ரசாயனப் பொருளுக்கு கொரோனா வைரசை எதிர்க்கும் திறன் இருப்பதாக புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

பரவலைத் தடுக்க (To prevent spread)

கொரோனா என்ற ஒற்றை வார்த்தை, கடந்த 2 ஆண்டுகளாக நம்மை அச்சத்தின் பிடியில் வைத்திருக்கிறது. ஏனெனில் கொஞ்சம் தப்பினால் மரணம் நிச்சயம் என்பதால், அனைவருமே தடுப்பூசி படலத்திற்கு தயாரானோம்.

தடுப்பூசியைப் போட்டு முடிப்பதற்குள், இதோ நாங்களும் இருக்கிறோம் என்ற தொணியில், டெல்டா வைரஸ், ஒமிக்ரான் என பல உருவங்களில் உருவமாறி வந்து உலகை வாட்டி வதைக்கிறது கொரோனா வைரஸ். இதையடுத்து தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க ஏதுவான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

ஐ.ஐ.டி (IIT)

இதன் ஒருபகுதியாக, ஹிமாச்சலப் பிரதேசத்தின் மண்டியில் உள்ள ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப மையம் மற்றும் சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவுக்கு எதிரான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மருந்து தயாரிப்பு (Pharmaceutical product)

இந்த ஆய்வில் தெரியவந்ததாவது: தற்போது கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதற்கான மருந்துகள் தயாரிப்பதற்கான ஆய்வுகள் பல நாடுகளில் நடந்து வருகின்றன.ஹிமாச்சலப் பிரதேசம் உள்ளிட்ட இமயமலை பகுதியில் விளையும் புரன்ஷ் என்ற செடியை, வைரஸ் நோய்களுக்கு எதிராக உள்ளூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தயாரிப்பது எப்படி? (How to prepare?)

சுடுநீரில் இந்த மூலிகைச் செடியின் இலைகளைப் போட்டு, அதன் சாற்றைக் குடிப்பதால் வைரஸ் நோய் குறைவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த செடியை ஆய்வு செய்தோம். இதன்படி இந்த செடியின் இலைகளில் உருவாகும் சில ரசாயனப் பொருட்களுக்கு கொரோனா வைரசை எதிர்க்கும் சக்தி இருப்பது தெரியவந்துள்ளது.

தொடரும் ஆய்வுகள் (Continuing studies)

இது குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தச் செடியின் ரசாயனப் பொருளில் இருந்துக் கொரோனாவை தடுக்கும் மருந்து தயாரிப்பதற்கான முதல் படியை எட்டியுள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் படிக்க...

10 நாட்கள் தனிமைப்படுத்துதல் போதாது - புதிய ஆய்வில் தகவல்!

கொரோனா 3வது அலை எப்போது Endcard போடும்? நிபுணர்கள் விளக்கம்!

English Summary: Herb that gives Tough to Corona- Discovery in the study! Published on: 18 January 2022, 10:47 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.