திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை (Herb) பொருள்கள். திருச்சியின் மூலை முடுக்குகளிலிருந்து நாட்டு வைத்தியர்கள், இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பொதுமக்கள் ஆகியோர் படையெடுத்து வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மதியம் வரை மூலிகை விற்பனை இங்கு களைக்கட்டுகிறது.
மூலிகை வியாபாரியின் அனுபவம்:
இருபது ஆண்டுகளாக இந்த தொழிலைச் செய்துவரும் சித்ரா (Chithra) ஓர் கைதேர்ந்த மருத்துவர்போல் தன்னிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் பிரச்சினைக்குத் தகுந்தவாறு மூலிகையின் மருத்துவ பயன்பாடு (Medical use) பற்றி விளக்கிக் கூறி அதை என்ன மாதிரி சாப்பிடவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். குறைந்தது நூறு மூலிகைகளோட மருத்துவ குணம் எனக்கு அத்துப்படி. சில பேர் அவங்களுக்கு தெரிஞ்ச மூலிகை பேரைச் சொல்லி வாங்கிட்டுப் போவாங்க. அதுல சிலருக்கு அதை எப்படி மருந்தாகப் பயன்படுத்த வேண்டும் என்று தெரியாது. அவர்களிடம் என்ன பிரச்சினைக்காக இந்த மூலிகையை வாங்கிட்டுப் போறாங்க என்று கேட்டு தெரிஞ்சுக்கிட்டு அதற்கேற்ற மருந்து செய்யும் வழிமுறையை (Procedure) சொல்லிக் கொடுப்பேன்.
சிலபேர் வியாதி, உடல் பிரச்சினையை மட்டும் சொல்வார்கள். அவர்களுக்கு நானே மூலிகையைக் கொடுத்து சாப்பிடும் வழிமுறையையும் சொல்லித் தருவேன். இதுமாதிரியான மருத்துவ ஆலோசனைகளுக்காக கட்டணம் (Fees) வாங்குவதில்லை.
காடுகளில் மூலிகை சேகரிப்பு:
நொச்சியம் அருகேயுள்ள கூடப்பள்ளியைச் சேர்ந்த சித்ரா இந்த மூலிகைகளைச் சேகரிப்பதற்காக 2 நாள் காடு (Forest), கழனி என்று அலைந்து, திரிந்து எடுத்துக்கொண்டு வருகிறார். இவரைப்போல் 10-க்கும் மேற்பட்டோர் மூலிகைகளைச் சேகரித்து எடுத்துக்கொண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் திருச்சிக்கு விற்பனை செய்ய வந்துவிடுகின்றனர்.
மூலிகை வகைகள்:
சிறுகுறிஞ்சான், ஓரிதழ் தாமரை, பிரண்டை, கீழாநெல்லி, வல்லாரை, கண்டங்கத்தரி, ஆமணக்கு, ஆடாதொடை, திப்பிலி, அதிமதுரம், தூதுவளை, கரிசலாங்கண்ணி, நித்தியக் கல்யாணி, கற்பூரவள்ளி என ஏராளமான மூலிகை வகைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
வியாழக்கிழமையும் மூலிகை விற்பனை:
வியாழக்கிழமையும் கொஞ்ச மூலிகைகளைக் (Herb) கொண்டுவந்து கடை போடுவோம். வியாழக்கிழமை 700 ரூபாய்க்கு விற்பனையாகும். ஞாயிற்றுக்கிழமை ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை நடக்கும். முன்னைக்காட்டிலும் இப்போ மூலிகை வாங்குற மக்கள் கூட்டம் அதிகமாயிருக்கு.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
பயிர் காப்பீட்டு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 30! காஞ்சிபுரம் வேளாண் மையம் அறிவிப்பு!
Share your comments