பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். இந்த தை பட்டத்தில் பயிர் செய்ய ஏற்ற பயிர்களின் விபரங்கள், காலநிலை, செயல்பாடுகள் அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள்.
ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் பெரும்பாலான வைற்றைச் சாகுபடி செய்வார்கள். மார்கழிப்பட்டம், மாசிப்பட்டம், சித்திரைப்பட்டம் என்றும் தமிழ் மாதங்களைக் கணக்கிட்டும் அந்தந்தப் பட்டத்துக்கு ஏற்ற பயிர்களைச் சாகுபடி செய்வார்கள்.
இந்த தை பட்டத்திற்கு ஏற்ற பயிர் வகைகளும் அதன் காலநிலைகள் குறித்த விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
பயறு வகைகள்
-
உளுந்து - வம்பன் 8 11,
-
டி எம் பி1, ஏ டி டி 6
-
பாசிப்பயிறு - கோ 8
-
தட்டப்பயிறு - டி எம் வி 1
-
கொள்ளு - கருப்பு கொள்ளு
சிறுதானியங்கள்
-
கம்பு - கோ 10
-
வரகு - கோ-3
-
சாமை - ஏ எல் டி 1
-
பனிவரகு - ஏ எல் டி 1
-
கேழ்வரகு - கோ 15
-
திணை - கோ 7
எண்ணெய் வித்துப் பயிர்கள்
-
எள்ளு - TMV 3 ,4 ,6 ,7,SVPR 4
-
சூரியகாந்தி - co H 3
-
நிலக்கடலை - கோ 6 ,VRI 8
-
கொண்டைக்கடலை
-
சக்கரவள்ளி கிழங்கு
-
பருத்தி co6
-
மரவள்ளி
-
ஆமணக்கு ஒய் ஆர் சி ஹெச் 1,2
பழங்கள் & காய்கறிகள்
-
கத்தரி கோ2, பி எல் ஆர் 2
-
சின்னவெங்காயம்
-
தக்காளி பிகேஎம் 1 செடிமுருங்கை பிகேஎம் 1 எலுமிச்சை
-
ரஸ்தாளி/ நாடன்/கற்பூரவள்ளி
-
பப்பாளி
-
மா
-
அவரை கோ 14
-
வெண்டை கோ-4 கொத்தவரை mdu1 மிளகாய் கோ 1
-
சுரக்காய் co 1 pLR 1
-
பூசணி கோ 1,2
-
பீர்க்கன் co H 1
-
பாகல் co 1
-
புடலை கோ 2 ,PLR 1,
-
கோ H 1
பூ பயிர்கள்
-
குண்டு மல்லி
-
ரோஜா
-
முல்லை
பாரம்பரிய நெல் ரகங்கள்
-
சொர்ணமசூரி 120 நாட்கள் கருங்குருவை 110 நாட்கள்
-
பூங்கார் 90 நாட்கள்
-
அறுபதாம் குறுவை 75 நாட்கள்
-
மட்ட கார் 120 நாட்கள்
தீவனப் பயிர்கள்
-
தீவன சோளம் கோ 31
-
கம்பு நேப்பியர் co5
-
குதிரை மசால் கோ 6
-
வேலி மசால் co 1
-
தீவன தட்டைப் பயிறு co9
தகவல்
சிவபாலன்
திருச்சி, வேளாண் ஆலோசகர்
மேலும் பிடிக்க...
22% ஈரப்பத நெல் கொள்முதல் சாத்தியமா? விவசாயிகள் கோரிக்கை!
விவசாயிகளுக்கு அடிக்கப்போகிறது ஜாக்பாட்-ரூ.1 லட்சம் கோடி மானியம்!
விளை பொருட்களை பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள்! - தருமபுரி மாவட்ட ஆட்சியர் தகவல்!!
Share your comments