ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பானை வெளியிடப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையிலுள்ள ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடேட் நிறுவனத்தில் காலியாக உள்ள 60 டெக்னீசியன்கள் பணியிடங்களுக்கு டிப்ளமோ, ஐடிஐ படித்தவர்கள் விண்ணபிக்கலாம். அனைத்து பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க கடைசி நாள் : 25.02.2023
பணியிடத்திற்கான கல்வித்தகுதி, வயது வரம்பு போன்ற மற்ற விவரங்கள் பின்வருமாறு –
காலியாக உள்ள பணியிடங்கள்:
- Assistant process technician
- Assistant Boiler Technician
- Assistant Fire & Safety Officers
- Assistant Maintenance Technician (Electrician)
Assistant Process Technician:
காலியாக உள்ள 60 மொத்த பணியிடங்களில், Assistant Process Technician-பிரிவில் மட்டும் 30 இடங்கள் காலியாக உள்ளன. வேதியியல்/பாலிமர் வேதியியல்/இண்டஸ்டீரியஸ் வேதியியல் ஆகிய பாடங்களில் 60 சதவீத மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பு தேர்ச்சி அல்லது கீழ்க்காணும் ஏதாவது ஒரு பாடப்பிரிவில் 60 சதவீத மதிப்பெண்களுடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். ( பாடப்பிரிவுகள் – கெமிக்கல் இன்ஜினியரிங்க்/ பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்க்/ கெமிக்கல் இன்ஜினியரிங்க்( உரம்)/ கெமிக்கல் இன்ஜினியரிங்க்(பிளாஸ்டிக்& பாலிமர்)/ சுகர் டெக்னாலஜி/ சுத்திகரித்தல்& பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங்க்/ ஆயில் டெக்னாலஜி/ பாலிமர் டெக்னாலஜி )
Assistant Boiler Technician:
உதவி பாயிலர் டெக்னீசியன் பிரிவில் 7 இடங்கள் காலியாக உள்ளது. கல்வி தகுதியாக 60 சதவீத மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி பெற்று பாய்லர் அட்டெண்டெண்ட் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Fire & Safety Officers:
மொத்தமுள்ள 60 காலி பணியிடங்களில், Assistant Fire & Safety Officers பிரிவில் மட்டும் 18 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அறிவியல் பாடத்திட்டத்தில் பிளஸ்2 தேர்ச்சியுடன் “பயர் பைட்டிங்” பயிற்சியில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Maintenance Technician (Electrician):
60 காலி பணியிடங்களில், Assistant Maintenance Technician (Electrician) பிரிவில் 5 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. மேலும் கல்வித்தகுதியாக எலக்ட்ரிக்கல் டிப்ளமோ இன்ஜினியரிங்கில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
வயது வரம்பு :
மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பணியிடங்களுக்கும் வயது வரம்பு 18 லிருந்து 25-க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீடு பிரிவினருக்கு அதிகப்பட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். மேலும் சிபிடி தேர்வு, திறன் தேர்வு அடிப்படியில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். அனைத்து பணிகளுக்கான சம்பளம் ரூபாய் 27,500- 1,00,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
காலி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் http://www.ncbc.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப கட்டணம் 590 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி/எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
கூடுதல் பென்சன் பெற விண்ணப்பிக்கலாம்: EPFO அறிவிப்பு!
ஆட்டோ, டாக்சி வாங்க மானியத்துடன் கடனுதவி-நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
Share your comments