நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள பகுதிகளில், பிப்ரவரி 19ம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகின்றன பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதனால், வேட்பாளர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வாக்காளர்களை கவர பல்வேறு புது யுக்திகளை கையாளுகின்றனர்.
வங்கிகளுக்கு விடுமுறை (Leave for Banks)
தமிழக மாநில அளவிலான வங்கியாளர்கள் குழும சுற்றறிக்கை: தமிழகத்தில், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளுக்கு, வரும் 19ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. வாக்காளர்கள் ஓட்டு போட வசதியாக, தேர்தல் நடைபெறும் பகுதிகளில், அன்றைய தினம் பொது விடுமுறை அறிவித்து, தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
எனவே, தேர்தல் நடைபெறும் பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள், கிளைகளுக்கு 19ம் தேதி விடுமுறை அளிக்கப்படுகிறது. பிற பகுதிகளில் உள்ள வங்கி அலுவலகங்கள் மற்றும் கிளைகள் வழக்கம் போல செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கும் பகுதிகளில் வங்கிகளுக்கு விடுமுறை என்பதால், பொதுமக்கள் வங்கி சேவைகளை அதற்கு அடுத்த நாளில் இருந்து தடையில்லாமல் பெற முடியும்.
மேலும் படிக்க
உள்ளாட்சி தேர்தல்: ஓட்டுக்காக சாணம் அள்ளிய வேட்பாளர்!
வேட்பாளர்களுக்கு தேர்வு வைத்த கிராம மக்கள்: ஒடிசாவில் ருசிகரம்!
Share your comments