ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle and Scooters India) அதன் பிரசித்தி பெற்ற ஆக்டிவா 6ஜி மாடலில் பிரீமியம் எடிசன் (Activa Premium Edition) எனும் சிறப்பு பதிப்பை இந்திய வாடிக்கையாளர்களுக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முந்தைய எடிஷனான ஆக்டிவா 6ஜி-யை விட கவர்ச்சிகரமான மேக்ஓவர்களுடன், ஹோண்டா ஆக்டிவா பிரீமியத்தின் வெளிப்புறத்தோற்றம் கலக்கி வருகிறது.
ஸ்டைலிஷ் லுக்கில் ஆக்டிவா 6ஜி-யை விட பிரீமியம் மாடல் அசத்தலாக இருந்தாலும் விலை அதைவிட குறைவாகவே உள்ளது. ஆம், ஆக்டிவா 6ஜி-யைக் காட்டிலும் ஆக்டிவா பிரீமியம் மாடலின் விலை 3000 ஆயிரம் ரூபாய் குறைவாகவே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்கூட்டரின் விலை 75 ஆயிரத்து 400 ரூபாய் ஆகும்.
இந்திய வாடிக்கையாளர்கள் பல மாதங்களாக காத்திருந்த நிலையில், ஹோண்டா நிறுவனம் அதன் புதிய ஆக்டிவா 6ஜி பிரீமியத்தை அதிக விளிம்புகள் மற்றும் வளைவுகள் கொண்ட சில்கி லுக்கில் வடிவைத்துள்ளது. அதேபோல் பிரீமியம் மாடலின் லுக்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் பிரத்தியேகமான வண்ணங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆக்டிவா பிரீமியம் ஸ்கூட்டர் மேட் மார்ஷல், மேட் சங்ரியா மற்றும் மேட் பேர்ல் ஆகிய மூன்று ஷேடுகளில் கிடைக்கிறது.
இந்தியாவில் பிரபலமான ஸ்கூட்டருக்கு அழகு சேர்க்கும் வகையில் லோகோ, வீல் ரிம்கள் தங்க நிறத்தால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. புதிய பதிப்பின் பிரீமியம் சிறப்பியல்புகளை அளிக்கும் வகையில் முன்பக்கத்தில் கோல்டன் இன்செர்ட்டுகளுடன் கூடிய ஃபாசியா பொருத்தப்பட்டுள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக இருக்கைக்கு அருகில் ஆக்டிவா என்ற பெயர் தங்க நிறத்தில் எழுதப்பட்டுள்ளது. ஸ்கூட்டருக்கு ஒட்டுமொத்த டூயல்-டோன் ஷேட் வழங்க ஃபுட்போர்டு பகுதி மற்றும் இருக்கை ஆகியவை பழுப்பு வண்ணம் பூசப்பட்டுள்ளன.
6ஜி ஸ்கூட்டரில் 109 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டார் பயன்படுத்தப்பட்ட நிலையில், புதிய பிரீமியம் பதிப்பில் 109.5-சிசி, சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு மோட்டா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 7.7பிஎச்பி பவரை 8,000 ஆர்பிஎம்மிலும், 8.84 என்எம் டார்க்கை 5,500 ஆர்பிஎம்மிலும் வெளியேற்றக்கூடியது.
மேலும் படிக்க:
Share your comments