பொள்ளாச்சி பகுதிகளில் கடும் வறட்சி மற்றும் நீர்பற்றாக்குறை இல்லாத நிலை நலவுவதால் வாழை, மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடி மேற்கொண்டுள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளுமாறு தோட்டக்கலைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
வறட்சியில் பொள்ளாச்சி
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, கிடத்துக்கணவு உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் தென்னையுடன், வாழை, தக்காளி, மரவள்ளி உள்ளிட்ட பயிர்களை ஊடுபயிராக சாகுபடி மேற்கொண்டுள்ளனர். இப்பயிர்களுக்கு குறைந்த பட்ச நீர்பாசனம் அவசியம் தேவைப்படுகிறது. ஆனால், அப்பகுதிகளில் கடுமையான வறட்சி மற்றும் நீர் பற்றாக்குறை நிலவுவதாலும், வெயில், பனி, பலத்த காற்று, மழை உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகளால், போதிய நீராதாரம் இல்லாமல் இழப்பு ஏற்படும் சூழல் நிலவுகிறது.
இந்த பாதிப்பை குறைக்கும் வகையில், தோட்டக்கலைத்துறை சார்பில், பயிர் காப்பீடு மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், சேர்வகாரன்பாளையம், வடக்கிபாளையம் மற்றும் ராமபட்டிணம் ஊராட்சிக்கு உட்பட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமங்களில், மரவள்ளி மற்றும் தக்காளி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சாகுபடி பயிர்களுக்கு இழப்பீடு பெற குறிப்பிட்ட தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
தக்காளிக்கு பிரீமியமாக ஏக்கருக்கு, 1,401 ரூபாய் (வரும் 15ம் தேதிக்கு முன்பாக செலுத்த வேண்டும்) மரவள்ளிக்கு பிரீமிய தொகையாக ஏக்கருக்கு, 1,567 ரூபாய்
-
வாழைக்கு பிரீமியமாக, ஏக்கருக்கு, 4,367 ரூபாய்
-
வாழைக்கும், மரவள்ளிக்கும் மார்ச் 1ம் தேதிக்குள் பிரீமியம் செலுத்த வேண்டும்.
காப்பீடு செய்வது எப்படி?
பயிர்களுக்கு காப்பீடு செய்ய, சாகுபடிக்கான வி.ஏ.ஓ., சான்று, ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ, சிட்டா ஆகியவற்றுடன், வடக்கு ஒன்றிய தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுக வேண்டும், என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு! - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை!!
வேளாண் இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பு! - மாற்று ஏற்பாடுகளை செய்ய விவசாயிகள் கோரிக்கை!!
மானியத்துடன் ரூ.2 கோடி வரை கடன்! சந்தைப்படுத்தும் குழுக்களுக்கு அழைப்பு!
Share your comments