காய்கறிகள் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு மானிய விலையில் விதை பாக்கெட் வழங்கப்படுகிறது என தர்மபுரி தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் மாலினி கூறியுள்ளார்.
தர்மபுரி மாவட்ட விவசாயிகள், நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறிகளை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், நகர பகுதி மக்களும், தங்கள் வீட்டில் மாடித்தோட்டம் அமைத்து, அதில் பல காய்கறிகளை விளைவித்து வருகின்றனர். இவர்களின் தேவை கருதி, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை சார்பில், காய்கறி உற்பத்தி பெருக்குதல் திட்டத்தில் விதை பாக்கெட்டுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
15 ரூபாயில் காய்கறி விதைகள்
இதில், தக்காளி, கத்தரி, கொத்தவரை, வெண்டை மற்றும் முள்ளங்கி ஆகிய, ஐந்து விதை பாக்கெட்டுகள், தலா ஐந்து ரூபாய் என, 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். அரசு இதற்கு, 10 ரூபாய் மானியம் வழங்கி உள்ளதால், ஐந்து விதை பாக்கெட்கள், 15 ரூபாய்க்கு கிடைக்கும். இவை, தர்மபுரி மாவட்ட, அனைத்து தாலுகா தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் பெறலாம் என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க...
3.5 லட்சம் பெண்களுக்கு வெள்ளாடு, நாட்டுக் கோழி வழங்கப்படும் - அமைச்சர் தகவல்!!
சிறு சிறு வேளாண் தொழில் மூலம் லாபம் சம்பாதிக்கலாம் வாங்க..!
Share your comments