1. செய்திகள்

வாக்காளர் அட்டை பெறுவதற்கான வழிமுறைகள், தேவையான சான்றுகள் மற்றும் வாக்களிக்கும் முறைகள்

KJ Staff
KJ Staff

வாக்களிக்க தகுதியானவர்கள்

இந்தியா அரசியலமைப்பின் படி 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் குடிமக்களும் வாக்களிக்க தகுதியானவர்கள் என சட்டம் சொல்கிறது. 2010 ஆம் ஆண்டின்  சில தேர்தல்  திருத்தகங்களை கொண்டு வந்தது. அதன் படி வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் அந்நாட்டில் குடியுரிமை பெறவில்லையெனில் இந்தியாவில் வாக்களிக்கலாம். குற்றம் சுமத்த பட்டவர்களும், குற்றவாளியாக கருத படுபவர்களுக்கும்  வாக்களிக்க  சட்டம் அனுமதிக்கிறது.

வாக்காளர் அட்டை விண்ணப்பிக்கும் முறை தேவையான சான்றுகள்  

  • 18 வயது நிரம்பிய ஒவ்வொருவரும் வாக்கு உரிமையை பெறுவதற்கு தகுதியானவர்கள். இணைய தளத்தில் அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

  • நமக்கான விண்ணப்ப எண் கிடைத்தவுடன் அதில் குறிப்பிட்டுள்ள சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் போன்றவற்றை அருகில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் கொடுத்த சரி பார்க்க வேண்டும். நமக்கான வாக்காளர் அட்டை கிடைத்தவுடன் வாக்களிக்க தகுதியானவர்கள் ஆகிறோம்.

  • வாக்காளர் பெயர் பட்டியலில் நமது பெயரினை சரி பார்க்க இணையத்தளத்திலோ, அரசு உதவி எண்ணையோ(1950) உபயோக படுத்தலாம். உதவி எண்ணிற்கு முன்பு தங்களின் பின்கோடு எண்னை சேர்க்க வேண்டும். வாக்காளர் செயலியை பயன்படுத்தலாம்.

  • வாக்காளர்கள் தங்களின் குடியிருப்பினை மாற்றி இருந்தார்கள் எனில் அதற்கான மாற்று சான்றிதழ் வழங்கி வாக்காளர் அட்டையை புதுப்பிக்க வேண்டும். அதற்காக போரம் 6 வழங்க வேண்டும்.

  • வாக்காளர் பெயர் சேர்க்கவோ அல்லது நீக்கவோ போரம் 7 கொடுக்க வேண்டும்.

  • பெயர், பிறந்த தேதி, முகவரி, வயது, உறவு முறை, இவைகளில் ஏதேனும் மாற்ற வேண்டுமெனில் போரம் 8 வழங்க வேண்டும்,

  • வெளிநாட்டு வாழ் இந்தியர் எனில் போரம் 6A கொடுக்க வேண்டும்.

  • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்கள் தங்களின் வாக்கு மையம் மற்றும் பிற விவரங்களை இணையதளம், தேர்தல் மையம் இவற்றின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

  • வாக்கு மையத்தினை அடைந்தவுடன் நமது ஆள்கட்டி விரலினால் மை வைக்கபடும். பின் வாக்கு இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும் இடத்தை அடைந்து அதில் நமக்கு விருப்பமான வேட்பாளரை தேர்ந்திடுக்கலாம். இதனை உறுதி செய்யும் பொருட்டு அருகில் இருக்கும் இயந்திரத்தில் நாம் வாக்களித்த நபரின் புகைப்படம் சேகரிக்க படும். நாம் இதை உறுதி செய்த பின்னரே மற்றவர் வாக்களிக்க அனுமதிக்க படுவர்.

English Summary: how to apply and get the Voter Identification Card: Guidence for New Voters Published on: 25 April 2019, 12:10 IST

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.