1. செய்திகள்

சந்தன மரம் வளர்ப்பது எப்படி? 3 மணி நேரத்தில் கற்கலாம் வாங்க!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to grow sandalwood? Learn in 3 hours -
Credit : Big Basket

இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தில் இரண்டறக் கலந்துவிட்ட விஷயங்களில் சந்தனமும் ஒன்று.

சந்தன மரம் வளர்ப்பு என்பது முன்பெல்லாம் சர்ச்சைக்குரிய விஷயம். ஆனால் அரசு அனுமதி அளித்திருப்பதால், யார்வேண்டுமானாலும் சந்தன மரம் வளர்ப்பை தாராளமாகச் செய்யலாம்.

அவ்வாறு வளர்க்க வேண்டுமானால், முறையாக பயிற்சி பெற்றிருப்பது மிக மிக அவசியம். அதற்கு அருமையான வாய்ப்பு கொடுத்து உதவுகிறது, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இயங்கும் Institue of Wood Science and Technology (IWST) என்ற கல்வி நிறுவனம்.

மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சகத்தின் இந்திய வனத்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் செயல்படும் இந்த நிறுவனம், Centre of Excellence for Sandalwood Research & Wood Scienceஸின் அங்கீகாரம் பெற்றது.

பயிற்சி மற்றும் முன்பதிவு முற்றிலும் இலவசம்.

பயிற்சி நடைபெறும் நாள் - செப்டம்பர் 21 ம் தேதி முதல் 24ம் தேதி வரை

பயிற்று மொழி

21ம் தேதி -ஹிந்தி
22ம் தேதி -கன்னடம்
23ம் தேதி -தமிழ்
24ம் தேதி -தெலுங்கு

3 மணி நேரம் அளிக்கப்படும் இந்த ஆன்லைன் பயிற்சியில், சந்தனமரத்தை வளர்க்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள், நோய் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து சொல்லித்தரப்படுகிறது.

IWSTயின் விஞ்ஞானிகள் பலரும் கலந்துகொண்டு தங்களின் ஆலோசனைகளை வழங்குகின்றனர்.

நீங்களும் இந்தப் பயிற்சியில் சேர்ந்து பயன்பெற விரும்பினால், WhatsApp: 7019514281,
Phone No: 080-22190168 என்ற எண்களிலும்,  iwst.rajarishi@gmail.com என்ற இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் படிக்க...

அரசின் இலவச ஆட்டுக் கொட்டகைத் திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? விபரம் உள்ளே!

அமலுக்கு வருகிறது அரிசி ATM- கூட்ட நெரிசலைத் தடுக்க புதிய யுக்தி!

English Summary: How to grow sandalwood? Learn in 3 hours - details inside! Published on: 12 September 2020, 05:25 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.