1. செய்திகள்

சிலிண்டர் மானியம் பெற, SMS மூலம் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி?

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
How to link resource via SMS to get cylinder grant?
Credit : Latest News

சமையல் எரிவாயுவுக்கான மானியம் பெற மிகவும் அவசியமான ஆதார் எண்ணை, எஸ்.எம்.எஸ். மற்றும் போன் கால் மூலமாகவே மிகச் சுலபமாக இணைத்துக் கொள்ளலாம். வீட்டில் இருந்தபடியே ஆதாரை இணைக்க முடியும். அது எப்படி என்று இங்கே பார்க்கலாம்...

ஆதார் கட்டாயம் (Aadhar is mandatory)

இந்தியர் யாராக இருந்தாலும், ஆதார் இருக்கவேண்டியது மிக மிக அவசியமாக்கப் பட்டுள்ளது. இது தனிமனித அடையாளமாக மட்டுமல்லாமல் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற கட்டாயமாக உள்ளது.குறிப்பாக, அரசின் மானிய உதவிகளைப் பெறுவதற்கு ஆதார் அவசியமாகும்.

அந்த வகையில் சமையல் எரிவாயு சிலிண்டர் இணைப்பில் மானிய உதவி பெறுவதற்கும் ஆதார் அவசியமாக உள்ளது. நேரடிப் பயன் பரிமாற்றத் திட்டத்தின்கீழ் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் மானிய உதவி டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இடைத்தரகர் மற்றும் சுரண்டல் பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன.

எஸ்.எம்.எஸ். வசதி (SMS)


இண்டேன் நிறுவனம் சமீபத்தில் எஸ்.எம்.எஸ் மற்றும் மொபைல் அழைப்பு வாயிலாக ஆதாரை இணைக்கும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. 

  • ஆதார் இணைப்புக்கு முதலில் உங்களது மொபைல் நம்பர் (Mobile Number)சிலிண்டர் ஏஜென்சியுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.

  • உங்களது மொபைல் எண்ணைப் பதிவு செய்வதற்கு IOC std code என்று டைப் (Type )செய்து 1800-2333-555 என்ற இண்டேன் கஸ்டமர் கேர் நம்பருக்கு(Customer Care Number)எஸ்.எம்.எஸ். அனுப்ப வேண்டும்.

  • மொபைல் எண் பதிவானவுடன் ஆதார் இணைப்புக்கு UID Aadhaar number என டைப் செய்து (Type )கஸ்டமர் கேர் (Customer Care Number)நம்பருக்கு அனுப்ப வேண்டும்.

    இதன் பின்னர் கேஸ் ஏஜென்சியுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும்.

போன் கால்!(Phone Call)

ஆதாரை போன் கால் மூலமாக இணைப்பதற்கு உங்களது பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரிலிருந்து 1800 2333 5555 என்ற எண்ணை அழைக்க வேண்டும்.
அதில் உங்களது ஆதார் நம்பரைக் கூறினால் சிலிண்டர் இணைப்பில் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிடும்.

ஆன்லைன்(Online)

ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் ஆதாரை இணைக்க முடியும். ஆதார் அமைப்பின் அதிகாரப்பூர்வ இணையப்பக்கத்திற்குள் சென்று உங்களது முகவரி போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும். இதேபோல், சிலிண்டர் இணைப்பு, கேஸ் ஏஜென்சி, இண்டேன் கேஸ் ஐடி (Indane Gas ID)போன்றவற்றைப் பதிவிட வேண்டும்.

இதன் பின்னர் submit கொடுத்தால் உங்களது மொபைல் நம்பருக்கு ஓடிபி (OTP)வரும். அதைப் பதிவிட்டு submit கொடுத்தால் ஆதார் இணைக்கப்படும்.

மேலும் படிக்க...

சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!

பயிரின் வளர்ச்சி ஊக்கிகள் ஏழு வகை!

வாழை சாகுபடியில் அதிக விளைச்சல் பெறும் சூத்திரம் இதுதான்!

English Summary: How to link resource via SMS to get cylinder grant? Published on: 17 February 2021, 11:53 IST

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.