அரசு தேவைகளுக்கு ஆதார் அட்டை ஒரு முக்கியமான ஆவணமாக கருதப்படுகிறது. உங்கள் ஆதார் அட்டையை தொலைத்து விட்டால், நீங்கள் ஆதார் எண்ணை எளிய வழிறையின் மூலம் லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளலாம்.
ஆதார் அட்டை லாக் செய்வது எப்படி ?
வங்கிக் கணக்கைத் திறக்கும் நேரத்திலிருந்து அரசாங்கத்தின் அனைத்து முக்கிய தேவைகளுக்கும் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் குழந்தைகள் சேர்க்கை, கல்லூரி சேர்க்கை, அத்துடன் தனிப்பட்ட நடவடிக்கைகள் அனைத்திற்கும் மத்திய அரசின் ஆதார் அட்டை அவசியம். இந்த ஆதார் அட்டைகள் தொலைந்து விட்டால் அது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. தொலைந்த ஆதார் அட்டையின் எண்ணை வைத்து உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எளிதாக பணத்தை எடுக்கலாம்.
ஏனென்றால், ஆதார் அட்டை தொலைபேசி எண், பான் எண் மற்றும் வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே ஆதார் அட்டை மூலம் உங்கள் பணத்தை எளிதாக திரும்பப் பெறலாம். இந்த சூழலிலிருந்து பாதுகாக்க UIDAI சார்பாக உங்கள் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்து கொள்ளும் வசதி வழங்கியுள்ளது. அதன்படி, உங்கள் ஆதார் அட்டை தொலைந்தால், ஆதார் எண்ணை எளிதாக லாக் செய்யலாம்.
உங்கள் ஆதார் எண்ணை லாக் செய்ய :
- முதலில் Virtual IDயின் 16 இலக்க எண் தேவைப்படும்.
- இந்த எண்ணை பெற்றுக்கொள்ள 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும்.
- உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- அந்த SMS, GET OTP வகையில் இருக்கும்.
- இந்த SMSல் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்கம் தேவைப்படும். பிறகு UIDAIயிலிருந்து ஆதாருடன் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- இந்த OTP எண்ணை பெற்ற பிறகு அதே எண்ணுக்கு மீண்டுமாக LOCK UID என்ற வகையில் SMS செய்யவும்.
- இந்த SMSல் உங்கள் ஆதார் எண்ணின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன் OTP தேவைப்படும்.
- பிறகு உங்கள் ஆதார் எண் UIDAIவால் லாக் செய்யப்படும்.
- இதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
ஆதார் எண்ணை UNLOCK செய்ய :
- முதலில் Virtual IDயின் 16 இலக்க எண் தேவைப்படும்.
- அதற்கு 1947 என்ற எண்ணுக்கு SMS அனுப்பி OTP எண்ணை பெற்று கொள்ள வேண்டும்.
- அந்த Virtual IDயின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன் GET OTP Formatல் SMS அனுப்ப வேண்டும்.
- பிறகு மீண்டுமாக உங்கள் மொபைல் எண்ணுக்கு OTP அனுப்பப்படும்.
- மீண்டுமாக Virtual IDயின் கடைசி நான்கு இலக்க எண்ணுடன், OTP எண்ணையும் சேர்த்து UNLOCK UID வகையில் SMS அனுப்ப வேண்டும்.
- இந்த SMSஐ பெற்றுக்கொண்ட பிறகு UIDAIயிலிருந்து உங்கள் ஆதார் அட்டை UNLOCK செய்யப்படும்.
- இதை உறுதிப்படுத்துவதற்கு உங்கள் மொபைல் எண்ணுக்கு SMS அனுப்பப்படும்.
இத்தகைய சுலபமான முறையில் நீங்கள் தன் ஆதார் அட்டையை லாக் மற்றும் அன்லாக் செய்து தன் விவரங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும் படிக்க..
ஆதார் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- உதவி இயக்குநர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம்!
ஆதார் எண் இல்லாத விவசாயிகளுக்கு உரங்களை விற்றால் கடும் நடவடிக்கை!
Share your comments