நாளை முதல் 3 நாட்களுக்கு மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசுக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
வானிலை முன்னறிவிப்பு (Weather Forecast)
7.02.2021 முதல் 9.02.21 வரை
-
இன்று முதல் 10ம் தேதி வரை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.
-
அடுத்த இரண்டு நாட்களுக்கு காலை நேரங்களில் வட தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை (Chennai)
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் இருக்கும். காலை நேரங்களில் இலேசான பனிமூட்டம் காணப்படும்.
வெப்பநிலை (Temperature)
அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸையும் ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை (Warning for fishermen)
-
7.02.21ம் முதல் 9.02.21ம் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் வட கிழக்கு திசையில் இருந்து பலத்த சூறாவளிக் காற்று, மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
-
எனவே இந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க..
சோலார் மின்வேலிக்கு மானியம் அறிவிப்பு! - விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்களும் வரவேற்பு!!
கடைகோடி விவசாயிக்கும் நன்மை பயக்கும் "இ-நாம்" எனும் "ஒரே நாடு ஒரே சந்தை" ஆப்!
Share your comments