இன்று உலகம் முழுவதும் பெரும்பாலான ஆராய்ச்சிகள் விவசாயம், இயற்கை விவசாயம், மண்ணில்லா விவசாயம் என நீண்டு கொண்டே இருக்கிறது. சீனா மற்றும் ஐக்கிய நாடுகளின் அமைப்பின் ஆராய்ச்சியாளர்கள் இணைந்து மேற்கொண்ட நைட்ரேட் குவிப்பை குறைக்கும் ஆய்வில் வெற்றிக் கண்டுள்ளனர். அவர்களின் ஆய்வின் 24 மணி நேரம் RB LED ஒளி பல்புகளின் வெளிச்சத்தில் வளரும் தாவரங்கள் நன்றாக வளர்ச்சி அடைந்துள்ளதாக கண்டுபிடித்துள்ளனர்.
இதில் ஈடுபட்ட ஆராய்ச்சியாளர்கள் ஹைட்ரோபோனிக்ஸ் (Hydroponics) அதாவது மண்ணில்லா நுட்பத்தை பயன்படுத்தி தாவரங்களை எவ்வாறு அதிக ஆற்றல் பெற்றதாக மாற்ற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். இந்த தொழில்நுட்பத்தில் இரசாயன உரத்தை மிக குறைவாகவே பயன்படுத்தி உள்ளனர். அதுமட்டுமல்லாது நீரின் பயன்பாடும் குறைவாகவே இருப்பதாகவே கண்டறிந்துள்ளனர்.
RB LED ஒளிச்சேர்க்கையானது கீரைகளின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. பச்சையம் நிறைந்த காய்கறிகள், கீரைகளில் ஹைட்ரோபோனிக்ஸ் அளவினை அதிகரிப்பதுடன், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்துவிடுகிறது. மேலும் இந்த ஒளிச்சேர்க்கையினால் ஆக்ஸிஜனேற்ற (Antioxidant) செறிவு அற்புதமாக நடைப்பெறுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதன் தொடர்ச்சியாக ஆராய்ச்சியாளார்கள் வண்ண சி.எல் பல்புகளை பயன்படுத்தி கீரையினை வளர்க்க சோதனை செய்தனர்.
LED பல்பில் சிவப்பு மற்றும் நீல நிறம் ஒளிச்சேர்க்கை தாவர வளர்ச்சியை அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் RB மற்றும் RBG தலைமையில் நடத்தப்பட்ட சோதனையில் LED மற்றும் CL பல்புகளின் ஒளி நைட்ரேட் (Nitrate) அளவை குறைத்து தாவர வளர்ச்சிக்கு உதவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் கீரையின் வளர்ச்சி வியக்கத்தக்க வகையில் இருந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
https://www.sciencedaily.com/releases/2016/05/160510103139.htm
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments