கொரோனா தடுப்பு மருந்தை எடுத்து கொள்ளும் கடைசி நபராக தாம் இருக்க விரும்புவதாக ஈஷா அறக்கட்டளை நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
கொரோனாத் தடுப்பு மருந்தைக் கூடிய விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் பணியில் மத்திய, மாநில அரசுகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றன. இந்திலையில், பெங்களூருவில் Tech Summit 2020 என்ற தொழில்நுட்ப மாநாடு ஆன்லைன் மூலம் நடைபெற்றது.
இதில் சத்குரு சிறப்புரை ஆற்றி பேசியதாவது,கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்று கொள்ளும் கடைசி நபராக நான் இருக்க விரும்புகிறேன்.
தங்கள் உயிரை பணையம் வைத்து களப் பணியாற்றி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல்துறையினருக்கு கொரோனா தடுப்பு மருந்தை முதலில் வழங்கப்ப வேண்டும். மேலும், நோய் எதிரப்பு சக்தி குறைவாக இருக்கும் வயதானவர்கள் மற்றும் பிற நோய்களால் பாதிப்புகளுக்கு உள்ளாகி ஆபத்து நிலையில் இருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.
இந்த தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் அதில் ஊழல் நடப்பதைத் தடுக்கும் வகையில், பொருளாதார ரீதியாக வசதியாக இருப்பவர்கள் அதை குறிப்பிட்ட விலை கொடுத்து வாங்கும் நிலை உருவாக்கப்பட வேண்டும. இற்lகாக தடுப்பு மருந்துக்கு அரசு விலை நிரணயிக்க வேண்டும்.
அதில் இருந்து கிடைக்கும் நிதியை பயன்படுத்தி பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும். இதன் மூலம் அரசின் செலவுகளும் குறையும்.
இவ்வாறு ஜக்கி.வாசுதேவ் கூறினார்.
மேலும் படிக்க...
மரம் நட விரும்புபவரா நீங்கள்? களம் அமைத்துத் தருகிறது ஈஷா!
80% அரசு மானியத்தில் அசத்தல் வியாபாரம்- முழு விபரம் உள்ளே!
தினமும் ரூ.160 செலுத்தி ரூ.23 லட்சத்தை அள்ளுங்கள்- LICயின் Money back Plan!
Share your comments