1. செய்திகள்

வீட்டுக் கடன் வட்டியை உயர்த்தியது ICICI வங்கி: வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி!

R. Balakrishnan
R. Balakrishnan

Housing loan Interest hiked

முன்னணி தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி (ICICI Bank) வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. இதனால், வீட்டுக் கடன் வாங்கியவர்கள், புதிதாக வாங்குவோர் என இரு தரப்பினரும் கூடுதல் EMI தொகை செலுத்த வேண்டியுள்ளது.

அடிப்படை வட்டி உயர்வு

ஐசிஐசிஐ வங்கி ஜனவரி 1ஆம் தேதி முதல் அடிப்படை வட்டி விகிதமான MCLR வட்டியை உயர்த்தியுள்ளது. ஒரு மாதம் வரையிலான MCLR வட்டி 8.40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூன்று மாதங்களுக்கான MCLR வட்டி 8.45% ஆக உயர்ந்துள்ளது. ஆறு மாதங்களுக்கான MCLR வட்டி 8.60% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஒரு ஆண்டுக்கான MCLR வட்டி 8.65% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

MCLR வட்டி

MCLR வட்டி என்பது வீட்டுக் கடன் உள்ளிட்ட சில்லறை கடன்களுக்கு விதிக்கப்படும் அடிப்படையான வட்டி விகிதம் ஆகும். MCLR வட்டி விகிதம் உயர்த்தப்பட்டால் வீட்டுக் கடன், வாகன கடன், தனிநபர் கடன் போன்ற கடன்களுக்கான EMI தொகையும் உயரும்.

மற்ற வங்கிகள்

ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா உள்ளிட்ட வங்கிகளும் ஜனவரி 1ஆம் தேதி முதல் MCLR வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரெப்போ வட்டி உயர்வு

ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை தொடர்ந்து உயர்த்தி வருகிறது. தற்போது ரெப்போ வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இதனால், வங்கிகளும் சில்லறை கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி வருகின்றன.

மேலும் படிக்க

முக்கிய அறிவிப்பு: பொங்கல் பரிசை ஜனவரி 13 ஆம் தேதி வரை வாங்கலாம்!

அஞ்சல் துறை வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

English Summary: ICICI Bank Raises Home Loan Interest: Shock for Customers!

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2025 Krishi Jagran Media Group. All Rights Reserved.